Horticulture

Tuesday, 26 July 2022 07:21 PM , by: Elavarse Sivakumar

இனிமேல் யூகலிப்டஸ் மரக்கன்றுகளை நடக் கூடாது என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரம் நட்டு மழை பெறுவோம் என்ற விதிகள் இந்த மரங்களுக்கு தற்போதைக்குப் பொருந்தாது.

நீதிமன்றத்தில் விசாரணை

தமிழகத்தில், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளை, அறிக்கையாக அரசு தரப்பு தாக்கல் செய்தது.

10 ஆண்டுகளுக்குள்

அதில், 10 ஆண்டுகளுக்குள், வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்கள் அகற்றப்படும். இதற்காக, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால், விரைவில் முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒத்திவைப்பு

அதேபோல், அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவு எடுத்துள்ள தமிழக அரசு, இனிமேல் யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த, விசாரணை ஆக.,16க்கு, ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க...

இதய ஆரோக்கியத்திற்கு தினமும் 3 அல்லது 4 முந்திரி!

விமானத்தில் பயணித்த பெற்றோர்- இன்ப அதிர்ச்சி அளித்த மகன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)