சோறு வடித்தக் கஞ்சி, உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், வயல்வெளியின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. அது எப்படி என்பதைப் பார்ப்போம்.
ஒட்டும் திரவம் (Sticky liquid)
வடிகட்டிய கஞ்சியை பொறுத்தவரை நன்றாக ஒட்டும் திரவம்.
விதை நேர்த்தி (Seed treatment)
நாம் செய்யக்கூடிய விதை நேர்த்தியின்போது, கஞ்சியையும் சேர்த்து கொடுக்கும் போது அதனுடன் ஒட்டும் அதனாலதான் அது ஒரு ஒட்டும் திரவமாக இருக்கு. ஆக மிக குறைந்த விலையில் சிறப்பாக செயல் படக்கூடிய திரவம் இது.
பூஞ்சாணத் தொற்று நீக்கும் (Eliminates fungal infections)
-
இத்திரவம் ஒட்டி காய்ந்து ஒட்டி விழக்கூடியது . பொதுவாக இலைகளில் ஒட்டி இருக்கும் பூஞ்சாண தொற்று மற்றும் வெள்ளை ஈ மீது தெளித்தால் அரிசி கஞ்சி காய்ந்து இவற்றை எடுத்துகொண்டு கிழே விழ வாய்ப்புள்ளது .
-
முக்கியமாக வெள்ளை ஈ தாக்குதல் முடிந்தவுடன் கருப்பாக இருக்கும் "sooty mould " என்று சொல்வார்கள் அதை எடுக்க இதை தெளிக்கலாம்.
-
இதுமட்டுமல்ல, இலைகள் மற்றும் தண்டுகள் மேல் உள்ள பிரச்சனைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிட முடியாது. இவற்றின் மீது கஞ்சியைடி அடித்து விட்டால் நல்ல பலன் இருக்கும்.
வளர்ச்சியூக்கி (Grower)
அரிசி வடிகட்டிய கஞ்சி நல்ல வளர்ச்சியூக்கி. ஏனெனில் சாதத்தில் இருக்கக்கூடிய அதிகமான கார்போ ஹைட்ரட் கலந்திருக்க வாய்ப்புள்ளது இதை நேரடியாக கொடுத்தால் எறும்பு தொல்லைகள் வரலாம் , அதனால் மக்கவைத்து கொடுப்பது சிறந்தது.
100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அரிசி கஞ்சி கலந்து, அத்துடன் 1கிலோ நாட்டு சக்கரையும் சேர்த்துக் கலவையாக்கிக்கொள்ளலாம்.
இந்தக் கலவையை மூன்று நாள் மக்கவைத்து பயிர்களில் தெளிப்பதால் சிறந்த பலன் கிடைக்கும்
தோட்டக்கலை பயிர் (Horticultural crop)
தோட்டக்கலை பயிர்களில் மரத்தின் தண்டுகளில் ஒட்டி இருக்கக்கூடிய பூஞ்சாண தொற்று ஏற்பட்டு கருப்பாக இருந்தால் அரிசிக்கஞ்சியை தெளித்துவிடலாம் . காய்ந்து கருப்பாக இருப்பது விழுந்துவிடும்.
கஞ்சி, பூஞ்சாணத்தை கட்டுப்படுத்தாது என்பதால், சூடோமோனஸ் கொடுக்கவேண்டும் அவ்வாறுக் கட்டுப்படுத்திய பின்பு வரும் கருப்பை இதன் மூலம் எடுக்கலாம்.
மேலும் படிக்க...
முள்ளங்கி சாகுபடியில் கூடுதல் வருமானம் ஈட்ட சிம்பிள் டிப்ஸ்!
நீங்க டிகிரி முடிச்ச பெண்ணா? அப்படினா உங்களுக்கு ரூ.50,000!
நெல்லுக்கு எவ்வளவு நீர் தேவை? தெரியுமா உங்களுக்கு!