திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தி, பயிர்களில் அதிக மகசூல் பெறலாம் என கடலூர் வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மண் வளம் பெருகும் (Soil fertility will increase)
விவசாயத்தைப் பொறுத்தவரை, உரங்கள் இன்றியமையாதவையாகவேக் கருதப்படுகின்றன. ஏனெனில், மண்ணில் வளத்தைப் பேணிக் காக்கவும், மகசூலை அதிகரிக்கவும் இவை வித்திடுகின்றன.
அதிலும் திரவ உயிர் உரங்கள் என்பதை பயிர்களுக்கு இதயம் போன்றவை. இதனைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களில் அதிக மகசூல் உறுதி செய்யப்படுகிறது.
இது குறித்து கடலூர் வேளாண்துறை இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது :
மண் வளம் பாதிப்பு (Impact on soil fertility)
வேளாண்மையில் ரசாயன உரங்களின் தொடர்ச்சியானப் பயன்பாடு அதிகரித்து வருவதால் மண் வளம் பாதிக்கும் சூழல் உள்ளது.
உயிர் உரங்கள் (Bio-fertilizers)
இதைத் தவிர்க்க விவசாயிகள் உயிர் உரங்களைத் தவறாமல் பயன்படுத்தி மண்ணின் வளத்தை மீண்டும் வளமையாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதிக மகசூல் (High yield)
இதன் மூலம் நஞ்சற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க முடியும். குறைந்த செலவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த அங்கக இடு பொருட்களான திரவ உயிர்உரங்களை பயன் படுத்துவதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் அதிக மகசூல் கிடைக்க அதிகளவில் வாய்ப்பு உருவாகிறது.
இதற்காக கடலூர் உயிர் உர உற்பத்தி மையத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோஸ்பைரில்லமும், பயறு வகைகள், மணிலாவுக்கு ரைசோபியம், அனைத்து பயிர்களுக்குமான பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவை வழங்கப்படுகிறது.
மானிய விலையில் விற்பனை (Sale at subsidized prices)
நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோபாஸ் உள்ளிட்ட எட்டு வகையான உயிர் உரங்கள் ஆண்டுக்கு 50,000 லிட்டர் திரவ உயிர் உரங்களாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் அதிக தரத்துடன் வினியோகம் செய்யப்படுகிறது.
வேளாண்துறை அறிவுறுத்தல் (Agricultural instruction)
எனவே, குறுவை, சொர்ணவாரி மற்றும் காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் திரவ உயிர் உரங்களைக் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் பெற்றுப் பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!
புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!
நெற்பயிர்களைத் தாக்கும் கருப்பு நாவாய் பூச்சி! கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!