பயிர்களைத் தாக்கும் பல நோய்களைக் கட்டுப்படுத்தி சூப்பர் பலன் தருகிறது உயிர் உரமான சூடோமோனாஸ்.
சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் என்பது உயிர் பூஞ்சாணக் கொல்லியாகும். இது பயிர்களுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்து, நோய்களைக் கட்டுப்படுத்தும் வல்லமைப் படைத்தது. பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை துாண்டுவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இது ஒரு செல்லுடைய, நேராகவும் அல்லது சற்று வளைந்தும், இரும்பு சத்துப் பற்றாக்குறையின் போது பச்சை, நீலம், ஊதா, மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு போன்ற ப்ளோரசன்ஸ் வகை நிறமிகளை உற்பத்தி செய்யக்கூடியதாகவும் திகழ்கிறது.
சூடோமோனாஸ்ஸின் பயன்கள் (Benefits)
-
இது பயிர்களில் இலைக் கருகல் இலைப்புள்ளி, குலைநோய், நருநோய், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது.
-
சூடோமோனஸைப் பயன்படுத்துவதால், பயிர்களில் ஏற்படும் நோய்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
-
பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்கிறது சூடாமோனாஸ்.
-
பயிர்களின் வேர்ளைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.
-
பயிர்களில் நோயை உண்டு பவனும் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கிறது.
எவ்வாறு பயன்படுத்துவது? (How to Use)
விதை, கிழங்கு நாற்று போன்றவற்றிற்கு சூடோமோனஸ் கொண்டு நேர்த்தி செய்யலாம். அடியுரமாக போடலாம்.
நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கலவை என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும். வடித்த தண்ணீரை நாற்றங்காலில் ஊற்றி விடவும்.
நாற்று நனைத்தல்
சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 2.5 கிலோவை 25 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஒரு எக்டருக்கு தேவையான நாற்றுகளை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து நட வேண்டும். நீண்ட நேரம் ஊற வைப்பதால் அதன் செயல் திறன் கூடுகிறது
வயலில் இடுதல்
நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து இடவேண்டும்.
தெளிப்பு முறை
சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சதவீதக் கரைசலை நடவுக்கு பின்னர் 45 நாட்கள் கழித்து நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.
மேலும் படிக்க...
ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!
அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!
80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!