மண்புழு குளியல் நீர் தயாரித்தல்
பயிர்களுக்கு இந்த நீரை தெளிப்பதன் மூலம் பலவிதமான ஊட்டச்சத்துக்களை வழங்கி, பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
* துளையிட்ட மண்பானை எடுத்துக்கொள்ளவும்.
* இதன் அடிப் பகுதியில் 5 செ.மீ உயரத்திற்கு ஜல்லி கலந்து சரளை மணலை நிரப்ப வேண்டும்.
* அதன் மீது மக்கிய குப்பையினை பானை முழுவதும் நிரப்பப் பட வேண்டும்.
* இதில் 100-150 மண் புழுக்களை விடவும்.
* இதற்கு மற்றொரு வாளியை வைக்கவும்.
* இந்தத் தண்ணீர் மண்புழுக்களை கழுவிக் கொண்டு அவைகளின் உடல் மேல் இருக்கும் ஹார்மோனை சேர்த்துக்கொண்டு வெளியேறும். இதை நீங்கள் சேகரிக்கலாம்.
* சேகரித்த நீர் தேயிலை வடிநீர் போல் இருக்கும்.
* இதனை அப்படியே எல்லாப் பயிர்களுக்கும் தெளிக்கலாம். (அல்லது) இத்துடன் 1-௨ லிட்டர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
மண்புழு உரத்தில் கிடைக்கும் சத்துக்கள்
மண்புழு ஒரு நாளில் 6 முதல் 7 முறை உணவு எடுத்துக்கொள்ளும். ஒரு வேலைக்கு 2 கிராம் மக்கு எடுத்துக் கொண்டால் அதன் கழிவில் வெளிவரும் சத்துக்களை கீழே காண்போம்.
அந்த மக்கில் மண்புழு 1 மில்லி கிராம் தழைச்சத்து உட்கொண்டால் 6 மில்லி கிராம் தழைச்சத்தாகவும், 1 மில்லி கிராம் சாம்பல் சத்து உட்கொண்டால் 11 மில்லி கிராம் சாம்பல் சத்தாகவும் மண்புழு கழிவில் வெளிவரும்.
ஒரு நாளைக்கு 6 முதல் 7 முரை உணவு உண்ணும். 36-42 மில்லி கிராம் தழைச்சத்து 42-49 மில்லி கிராம் மணிச்சத்து, 66-77 மில்லி கிராம் சாமல் சத்தும் கிடைக்கிறது. இதைத் தவிர பயிர்கள் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
K.Sakthipriya
krishi Jagran