Horticulture

Wednesday, 03 July 2019 10:20 PM

இயற்கை வேளாண்மையில் ஒவ்வொரு உயிரினமும் எதோ ஒரு வகையில் தாவரங்களுக்கு நன்மை செய்து கொண்டு தான் இருக்கின்றன. விலங்குகளின் கழிவுகள் உரமாகவும் அதே சமயத்தில் மண் வளமாகவும் மாறுகிறது. சில நேரங்களில் சில பூச்சிகள் பயிர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கின்றன.

பூச்சிகளை விரட்டுவதற்கு இயற்கை வேளாண்மை, நாமே தவரிக்க கூடிய சில இயற்கைக் கரைசல்களை பரிந்துரைக்கின்றன. பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது. அவற்றை விரட்டுவதே நோக்கம். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்டால் நம்மால் எந்த ஒரு சூழ்;நிலையிலும் நல்ல பூச்சி விரட்டியை தயார் செய்து கொள்ள முடியும்.

பூச்சி விரட்டி தயாரிக்க தேவையானவை

 நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய வழி. பின்வரும் இலை தழைகள் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டவை

  1. ஆடுதொடா, நொச்சி
  2. உடைத்தால் பால் வரும் எருக்கு, ஊமத்தை
  3. கசப்புச் சுவை மிக்க வேம்பு, சோற்றுக் கற்றாழை
  4. உவர்ப்பு சுவை மிக்க காட்டாமணக்கு
  5. கசப்பு உவர்ப்பு சுவை மிக்க வேப்பம் விதை

 இதன் இலைகளை அரைத்து சாறு அல்லது காய்ச்சி வடித்த நீரினை தாவரங்கள் மீது தெளிக்கும் போது பூச்சிகள் தொல்லை குறையும். 

பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை

  • சோற்றுக் கற்றாழை
  • பிரண்டை
  • எருக்கு
  • ஊமத்தை
  • நொச்சி
  • சீதா இலை
  • வேம்பு
  • புங்கம்
  • உண்ணிச் செடி
  • காட்டாமணக்கு
  • ஆடாதொடை

மேலே குறிப்பிட்ட செடிகளில் ஏதேனும் இலைகள் அல்லது எளிதில் கிடைக்க கூடிய இலைகளை தேர்தெடுத்து கொண்டால் போதும்.

7 முதல் 8 இலைகள் பூச்சி விரட்டி தயாரிக்க போதுமானது. ஒவ்வொன்றிலும் 1 கிலோ எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது நமக்கு  7 கிலோ  முதல் 8 கிலோ இலைகள் வரை கிடைத்து விடும்.  

காட்டாமணக்கு, வேம்ப முத்து இவற்றில் எதாவது ஒன்றை 100- 200 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இவற்றை கலந்து ஊறல் முறையில் பூச்சி விரட்டிகள் தயாரிக்கலாம்.

ஊறல் முறை

இந்த முறையில் இலைகளையும். விதைகளையும் 1 கிலோ வீதம் எடுத்து நன்கு இடித்து மூழ்கும் அளவிற்கு கோமியம் , 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முதல் 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைசலில் கலந்து கூழாக மாறிவிடும். இவற்றை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்த பயிர்களில் அடிக்கலாம்.

பூச்சி விரட்டியின்  பயன்கள்

பொதுவாக புழுக்கள் மற்றும் பூச்சிகள் மணத்தைக் அடிப்படையாக கொண்டு தான் பயிர்களைக் கண்டறிகின்றன.இதனால் நாம் தயாரிக்கும்  பூச்சி விரட்டி ஒருவித ஓவ்வாமை மணத்தை ஏற்படுத்துவதால் பூச்சிகள் பயிர்களின் அருகில் வராது.

கால்நடைகளின்  சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை தருவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. இதற்காக தான்  கால்நடைகளின் கழிவு மண்வளத்தை பாதுகாக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தினர்.

பூச்சி விரட்டியினால் பெரும்பாலானவை இறந்துவிடுகின்றன. இதனால் எண்ணிக்கைபெருமளவில் குறைந்து விடுகிறது. மடித்த பூச்சிகள் பறவைகளுக்கு உணவாகி விடுகின்றன.

இவ்வாறு செய்தல் உங்களையும், உங்கள் தாவரத்தையும் பூச்சிகளிடமிருந்து இயற்கையான முறையில் பாதுகாக்கலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)