கோவை மாவட்டம் அன்னுார் ஒன்றியத்தில், சொட்டுநீர் பாசனம் அமைக்க, ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சொட்டு நீர் பாசனம் (drip irrigation)
நீரின்றி அமையாது உலகு என்பதுபோல், பாசனம் இன்றிப் பயிர் சாகுபடி இல்லை. இருப்பினும், பருவத்தைப் பக்குவமாகத் தெரிந்துகொண்டு, பயிரின் தேவை அறிந்து சொட்டு நீர் பாசனத்தின் அடிப்படையில் சாகுபடி செய்வது விவசாயிகளின் செலவைக் குறைக்கும்.
அரசுத் திட்டம் (Government program)
இதன்மூலம் தண்ணீரையும் சிக்கனமாகச் செலவிடும் நுட்பத்தையும் தெரிந்துகொள்ள முடியும். இதைக் கருத்தில் கொண்டு, மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
ரூ.1.48 கோடி இலக்கு (Rs. 1.48 crore target)
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில், அன்னுார் ஒன்றியத்திற்கு, நடப்பாண்டில், 525 ஏக்கரில், சொட்டுநீர் பாசனம் அமைக்க, ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மானியம் (Subsidy)
சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீதமும், மானியம் வழங்கப்படுகிறது.
ஆவணங்கள் (Documents)
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் மண், நீர் மாதிரிகள் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை அணுகலாம்.
தொலைபேசி எண்கள் (telephone number)
இதேபோல், அன்னுார், அ.மேட்டுப்பாளையம், வடக்கலுார், ஒட்டர்பாளையம் ஊராட்சிகளுக்கு, 82200 26600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அல்லப்பாளையம், பசூர், கஞ்சப்பள்ளி ஊராட்சிகளுக்கு, 97877 04490 எண்ணிலும், ஆம்போதி, கணுவக்கரை, குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சிகளுக்கு, 82488 07545 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அதேநேரத்தில், கரியாம்பாளையம், காரேகவுண்டன்பாளையம், பொகலுார், வடவள்ளி ஊராட்சிகளுக்கு 97918 68407 எண்ணிலும், காட்டம்பட்டி, குப்பே பாளையம், பிள்ளையப்பன் பாளையம், குன்னத்துார் ஊராட்சிகளுக்கு, 90433 44200 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு (Contact)
மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம் ஊராட்சிகளுக்கு, 99942 33970 என்னும் எண்ணிலும் உதவி வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு திட்டத்தில் பயன்பெறலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் மண்புழு உரம்: அதிக செலவில்லாமல் தயாரிப்பது எப்படி?
மண் புழுக்களின் பங்களிப்பு: உள்ளீடுகள் மற்றும் நுட்பங்கள்
தர்பூசணி விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!