Horticulture

Wednesday, 17 April 2019 03:09 PM

எப்படி வீட்டில் பூந்தொட்டி மற்றும் செடிகள் வளர்கிறோமோ அதை போல நாம் காய்கறிகளையும் எளிதில்  எந்த சிரமும் இன்றி வளர்க்கலாம்.  என்ன சற்று பொறுமை தேவை பெண்களுக்கு அது அதிகமே உண்டு. முதல் முறை முயற்சித்தால்  அதிகம் வைக்க வேண்டாம் தக்காளி, வெங்காயம், பாகற்காய்  போன்ற இரண்டு மூன்று காய்கறிகளை கொண்டு முயற்சிக்கலாம்.

வளர்க்கும் முறை

வெங்காயம் : ஒரு பெரிய வெங்காயத்தில் வேர்பகுதியை ஒரு இன்ச் அளவில் வெட்டி பின் அதனை ஒரு தொட்டியில் ஈர  பதம் கொண்ட மண்ணில் ஆழமாக  வைத்து விடவேண்டும். பின்னர் தினமும் மற்ற செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போல இதனிலும் ஊற்றி  வர வேண்டும். 125ல் இருந்து 140 நாட்களுக்குள் நீங்க வெங்காயத்தை பெறலாம்

தக்காளி : ஒரு தொட்டியில் மண்ணை போடுவதற்கு  முன் தேங்காய் நாரை வைத்து அடிபாகத்தை  நிரப்பவேண்டும் இது நீரை வெளியேற்ற உதவும். பின் மண்ணுடன்  சேர்த்த உரக்கலவையை கொட்டி சரியான அளவில் பரப்பி பின் ஒரு தக்காளி அல்லது இரண்டு இதனை அரை இன்ச் அளவில் வட்டமாக வெட்டி பாதி அல்லது சிறிது ஆழமாக மண்ணில் வைத்து நன்றாக தண்ணீர் ஊற்றிவிட வேண்டும். பின்னர் 15 நாட்களில் முதல் கட்ட முலை அல்லது தக்காளி வளர்வதற்கான அடையாளமாக சிறிய இலைகள் முளைத்திடும். பின் தக்காளியின் வளர்ச்சியை காணலாம். 

பாகற்காய்: இரண்டு காய்களின் விதையை எடுத்து மண்ணிலே நன்றாக நட்டு வைக்க வேண்டும். பின் இதன் இலைகள் வளர்ந்த பிறகு குச்சி அல்லது பந்தல் போல வேலி அமைத்து விட வேண்டும். இது கொடி வகையை சார்ந்ததால் வேலி அமைப்பது நல்லதாகும். 15நாட்களில் காயின் முதல் வளர்ச்சி தெரியும், பின் அறுவடைக்கேற்ப அதனை பறித்து கொள்ளலாம்.

எந்த ஒரு விஷயத்திற்கும் பொறுமை வேண்டும். எத்தனை நாள் காத்திருப்பது என்று பொறுமை இழக்காமல்  ரசாயனம்  சேர்க்காத இயற்கை முறையில் ஆர்கானிக் காய்கறிகளை நம் வீட்டு  தோட்டத்திலேயே பெறலாம். சிறந்த காலம் அறிந்த ஆரோக்கியமான காய்களை பெறலாம்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)