பூச்சித்தாக்குதலில் இருந்துப் பயிர்களைப் பாதுகாக்கும் அஸ்திரமாகத் தற்போது இனக்கவர்ச்சிப் பொறிகள் பங்காற்றுகின்றன.
பூச்சிகளை அழித்தல் (Insect extermination)
தற்போது பயிர் பாதுகாப்பில் இரசாயன பூச்சி கொல்லிகளைக் காட்டிலும் இனக்கவர்ச்சிப் பொறியின் பங்கு கூடி வருகிறது. பூச்சிகளைக் கண்காணிப்பது, கவர்ந்து அழிப்பது இனக் கவர்ச்சியின் முக்கிய வேலையாகும். குறிப்பாக அதே இனத்தைக் கவர்ந்து அழிப்பது, இனக் கவர்ச்சி பொறியின் தனிச்சிறப்பாகும்.
சிறப்பு அம்சங்கள் (Special Features)
பிரமோன்
ஒரே இனத்தைச் சேர்ந்த தாய்ப்பூச்சி, அந்துப் பூச்சியைக் கவர்ந்திழுக்க ஒரு வித வாசனைப் பொருளைத் தன் உடலினுள் சுரக்கும். இந்த வாசனை காற்றின் மூலம் வெளியே பரவும். இதற்கு பிரமோன் என்று பெயர்.
அதே இனத்தைச் சேர்ந்த ஆண்பூச்சிகள், பெண் பூச்சிகளைத் தேடிச் சென்று புணரும். பின்னர், முட்டை இட்டு இனப் பெருக்கம் செய்யும். இந்த முட்டையில் இருந்து வெளியே வரும் புழுக்கள் பயிர்களைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கும்.
மலடாக மாற்றும் (Sterile)
இவ்வாறு முட்டை இடுவதைத் தடுக்கவே இனக் கவர்ச்சி பொறி பயன்படுகிறது. ஆண் பூச்சிகளுடன் சேராத பெண்பூச்சிகள் கருவுறாத முட்டைகள் இடும். இதில் இருந்து புழுக்கள் வாரது.
வகைகள் (Types
பூச்சிகளைத் துவம்சம் செய்யும் இனக்கவர்ச்சிப் பொறிகள் 3 வகைப்படும். அவை
-
குழாய் போன்ற நீண்ட பாலித்தீன் பைகள் அடங்கியப் பொறி
-
நீருள்ள வட்ட பொறி
-
முக்கோன வடிவ அட்டை வடிவ பொறி
இனக் கவர்ச்சிப் பொறி 10-12 எண்ணம் 30 முதல் 40 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும். சராசரியாக தினமும் 2-5 பூச்சிகள் ஒரு பொறியில் வந்து விழும். இதிலிருந்தே பூச்சியின் தன்மையைக் கவனிக்க முடியும்.
பூச்சி மருந்து (insecticide)
தாக்குதலின் தன்மைக்கேற்ப அவ்வப்போதுப் பூச்சி மருந்தையும் தெளிக்கலாம். இதன் மூலம் பூச்சித் தாக்குதலில் இருந்துப் பயிர்களைப் பாதுகாக்க முடியும்.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்,
வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை
9443570289.
மேலும் படிக்க...
தரிசு நில மேம்பாட்டு மானியத் திட்டம்-ஹெக்டேருக்கு ரூ.13,000!
விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!