இன்றைய உலகில் இரசாயன உரங்கள் பெருகி விட்ட நிலையில், இயற்கை முறையில் நஞ்சில்லாமல் காய்கறி சாகுபடி செய்வது தான் சிறந்தது. இதற்காக தமிழக அரசின் தோட்டக்கலை துறை (Horticulture Department) சார்பில் மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் இயற்கை முறைக்கு திரும்பியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு கிராமங்களில், இயற்கை விவசாயக் குழுக்கள் தொடங்கி நஞ்சில்லா காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.
சாகுபடிக்கான குழு
சேத்தியாத்தோப்பு அடுத்த வெள்ளியக்குடி கிராமத்தில் நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடிக்கான (Cultivation) குழு அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், வேளாண் விஞ்ஞானி அரிசுதன் நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடிக்கான திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து பேசினார். நஞ்சில்லா காய்கறிகளின் மூலம், உடல் நலம் பாதுகாக்கப்படும். இயற்கை உரங்களைப் (Natural compost) பயன்படுத்துவதால், உரச்செலவும் குறைவு தான்.
இயற்கை முறையில் சாகுபடி
பூச்சியியல் உதவி பேராசிரியர் விஜயராகவன் பூச்சிகள் (Pest) குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறை (Control Methods) குறித்து பேசினார். கீரப்பாளையம் சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் இயற்கை முறையில் சாகுபடி செய்யுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். வேளாண்மை பல்கலைக்கழக விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில், கொள்ளிடம் உப வடிநில திட்டம் செயல்படுத்தலின் கீழ் நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடி செய்வதற்கான 20 விவசாயிகள் கொண்ட குழுவை அமைத்தனர்.குழு தலைவராக சற்குணவதி திராவிடமணியையும், செயலாளராக ஜெயராஜையும் நியமனம் செய்தனர். நிகழ்ச்சியில், விவசாயிகள், கிராம மக்கள் பங்கேற்றனர். இளநிலை ஆராய்ச்சியாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மழையில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீடு! ஆட்சியர் உறுதி!
தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு!