மண்ணிற்கும், மனிதர்களுக்கும் கேடு விளைவிக்காத இயற்கை விவசாயத்தில், பயன்படுத்த வேண்டிய உரங்களைப் போல, தவிர்க்க வேண்டிய உரங்களும் இருக்கின்றன. அவற்றைத் தவிர்ப்பது மண்வளத்திற்கு நன்மை பயக்குவதாக அமையும்.
தேசிய அங்க உற்பத்தி திட்டம் (National Organic Production Program)
தேசிய அங்க உற்பத்தி திட்டம் NPOP கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல் படுத்த பட்டு வருகிறது. இதில் மண் வளத்தை பெருக்க உதவும் இடுபொருட்கள்,பயிருக்குப் பாதுகாப்பு தரக் கூடியப் பொருட்களும் உள்ளன. அதேநேரத்தில் தவிர்க்க வேண்டிய இடுபொருட்களும் உள்ளன.
தேசிய அங்க உற்பத்தி திட்டத்தின் கையோட்டில், எதை இடலாம் என்றும் எதைத் தவிர்க்கலாம் எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
அங்கக வேளாண்மை(Organic Farming)
இயற்கை வேளாண்மை என்பது சுற்றுச்சூழல் கேடு விளைவிக்காத இடுபொருட்களைப் பயன்படுத்தி, மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் நலனை மட்டுமே பேணி பாதுகாத்து பயிர் சாகுபடி செய்யும் முறையாகும்.
அபிடா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 33நிறுவனங்கள் தான் ஆர்கானிக் சான்றிதழ் வழங்கு கின்றன.
அனுமதிக்கப்பட்ட இடுபொருட்கள் (Permitted to use input)
-
விதைகள் மற்றும் இனப்பெருக்க பொருட்கள் சான்றிதழ் பெற்ற அங்கக வேளாண்மையில் இருந்து பெறப்பட்ட விதைகள்
-
பண்ணை உரம்
-
கோழிஉரம்
-
மாட்டு சிறு நீர் பயிர் கழிவுகள்
-
கம்போஸ்ட்
-
கடல்பாசி
-
இயற்கை முறையில் பெறப்பட்ட கால்சியம் கார்பனேட்,சோடியம் குளோரைடு, சாதாரண உப்பு
-
மெக்னீசியம் சல்பேட் ஜிப்சம்
-
உயிர் உரங்கள்
-
பயிர் பாதுகாப்பு மருந்துகளான பஞ்ச காவியா
-
ஜந்திலை கசாயம்
-
புங்கம் மற்றும் வேப்ப எண்ணெய்
-
என்.பி வி வைரஸ் ஒட்டுண்ணி
-
இறை விழுங்கி பொறிகள் பாலிகார்பனேட்
மேலே கூறிய இடுபொருட்களைப் பயன்படுத்தலாம்.
இதேபோல், Restricted சான்று பெற்ற நிர்வாக எழுத்து மூலம் அனுமதி பெறப்பட்ட இடுபொருட்களான, கம்போஸ்ட், பண்ணை பொருட்கள் இரசாயனக் கலப்பு இல்லா வைக்கோல் பேசிக் லாக் சல்பேட் ஆஃப் பொட்டாஷ் நுண்ணுட்டச் சத்துக்கள், போர்டோ கலவை, காப்பர் ஆக்ஸி குளோரைடு ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
தடைசெய்யப்பட்ட பொருட்கள் (Prohibited substances)
-
மரபணு மாற்றப்பட்ட விதைகள்
-
மனித கழிவு உள்ள உரங்கள்
-
செயற்கை உரங்கள்
-
செயற்கையான பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்துகள்
-
இரசாயன களைக்கொல்லி மருந்து
-
வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் புகையிலைச் சாறு, எத்தில் ஆல்கஹால்
போன்றவற்றைப் பயன் படுத்தக்கூடாது.
இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் இவற்றைத் தெரிந்து கொண்டால், சிறப்பான முறையில் சாகுபடி செய்ய முடியும்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
காளானைத் துவம்சம் செய்யும் ஈக்கள் - கட்டுப்படுத்தும் முறைகள்!