கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில், விவசாயிகளுக்கு வெங்காய விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தோட்டக்காலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விதைகள் இலவசம் (Seeds are free)
கிணத்துக்கடவில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில்,விவசாயிகளுக்கு, வீரிய ஒட்டு ரக வெங்காய விதைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அரசு நடவடிக்கை (Government action)
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு தோட்டக் கலைத்துறை வாயிலாக, வெங்காய விதைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
5கிலோ விதைகள் (5 kg of seeds)
விவசாயிகள் ஒவ்வொருவருக்கும், வீரியஒட்டு ரக பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காய விதைகள் தலா 2.5 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது.
தேவைப்படும் விவசாயிகள், கிணத்துக்கடவு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
விவசாயிகள், நிலத்தின் சிட்டா, அடங்கல், ரேன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் இரண்டு புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கவனத்திற்கு (Attention Farmers)
எனவே விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்திற்குச் சென்று, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை ஒப்படைத்து, தங்கள் தேவைக்கு ஏற்ப வெங்காய விதைகளைப் பெற்றுப் பயனடையுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
நிலையான வருமானம் தரும் மண்புழு உரம்! தயாரிப்பது எப்படி?
விரைவில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!