எள் அணைத்து வகை மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. எள் சாகுபடியை தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் செய்ய இயலும். எள் அடுமனை (பேக்கரி) பொருட்கள் தயாரிப்பில் வாசனை மற்றும் அழகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நிலத்தேர்வு
விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தன்னார்வ தாவரங்களில் இருந்து தனித்து இருத்தல் வேண்டும்.
அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது.
அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றிதழ் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து (வயலைச் சுற்றி) 50 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
உரமிடுதல்
தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை ஒரு ஹெக்டேருக்கு 50:25:25 கிலோ மற்றும் 5 கிலோ மாங்கனீசு சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும்.
இலைவழி உரம் தெளித்தல்
பூக்கள் பூக்கத் தொடங்கும் பருவத்தில் ஒரு சதம் டிஏபி கரைசலைத் தெளிக்க வேண்டும். மீண்டும் பத்து நாள் இடைவெளியில் இரண்டாவது தெளிப்பினைத் தெளித்தல் வேண்டும்.
அறுவடை
செடியில் 75-80 சதம் காய்கள் மஞ்சள் நிறமாக மாறி, அடிக்காய்கள் வெடிக்கத் தொடங்கும் போது அறுவடை செய்ய வேண்டும்.
இந்த நிலையில், காயின் ஈரப்பதம் 50-60 சதத்திலும் விதையின் ஈரப்பதம் 25-30 சதத்திலும் இருக்கும்.
விதைகள் பழுப்பு நிறமாக மாறி இருக்கும்.
அறுவடை செய்தபின், செடிகளை தலைகீழாக 3-4 நாட்களுக்கு வைக்க வேண்டும்.
விதைகளைப் பிரித்தெடுத்தல்
செடிகளை வளையக் கூடிய தன்மை உள்ள மூங்கில் கழியினால் அடித்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம்
விதைச் சுத்திகரிப்பு
நல்ல தரமான, விதைகளைப் பெறுவதற்கு 4/64”(1.6 மி.மீ) வட்ட கண் அளவு கொண்ட சல்லடைக் கொண்டு சலித்தல் வேண்டும்.
உலர வைத்தல்
விதைகளை 7-8 சத ஈரப்பதம் வரும் வரையில் நன்கு உலர்த்த வேண்டும்.
விதை நேர்த்தி
காய்ந்த விதைகளை கார்பென்டசிம் மருந்து கொண்டு ஒரு கிலோ விதைக்கு 2 கிலோ என்ற அளவில் 5 மி.லி. தண்ணீர் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைச் சேமிப்பு
விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து,பின்பு சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
விதைகளின் ஈரப்பதத்தினை 6 முதல் 7 சதமாகக் குறைத்து, பின்பு பாலித்தீன் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய /இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
விதையின் ஈரப்பதத்தினை 5 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால ( 15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்காக சேமித்து வைக்கலாம்.
k.sakthipriya
krishi jagran