Horticulture

Sunday, 09 May 2021 10:12 AM , by: Elavarse Sivakumar

Credit: Research Gate

பசுந்தாள் உரப்பயிரை சாகுபடி செய்து மண் வளத்தை அதிகரிக்குமாறு விவசாயிகளுக்கு திருநெல்வோலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநார் இரா.கஜேந்திரப் பாண்டியன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஊட்டச்சத்து குறையும் (Nutrition will decrease)

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நெற்பயிர் சாகுபடி செய்து வருவதால் மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறையும். இதை ரசாயன உரங்களைக் கொண்டு ஈடு செய்ய முடியாது.

பசுந்தாள் உரப்பயிர்கள் (Green manure crops)

அப்படியே ரசாயன உரங்களை பயன்படுத்தி ஈடு செய்ய முயன்றாலும் மண்ணில் உள்ள அங்ககப் பொருள்களின் அளவுகள் மற்றும் மண்ணின் கட்டமைப்புகள் போன்றவை மாறுதல் அடைய வாய்ப்புள்ளது. இதற்கு சரியான வழி பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடிச் செய்வதே ஆகும்.

சாகுபடிக்கு ஏற்ற தருணம் (The best time to cultivate)

பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்வதற்கு ஏற்ற தருணம் இது தான். பயிர்கள் அறுவடைக் காலத்துக்குப் பின்னர் குறைந்த ஈரப்பதம் இருக்கும் நேரத்தில், தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்யலாம்.

மண்வளத்தைப் பெருக்க (To multiply the soil)

மண்ணின் வளத்தைப் பெருக்கப், பாசன வசதி உள்ள நிலங்களில் தக்கைபூண்டு, சணப்பு, கொளுஞ்சி, அகத்தி, மணிலா போன்ற பசுந்தாள் உரப்பயிர்களைச் சாகுபடி செய்யலாம்.

தக்கைப்பூண்டு

தேவையான ஈரப்பதம் நிலத்தில் இருக்கும்போது ஏக்கருக்கு 16 கிலோ என்ற விகிதத்தில் தக்கைப்பூண்டை விதைக்கலாம்.

மடக்கி உழுதல் (Folding plowing)

விதைத்து 30 முதல் 35 நாள்கள் கழித்து பாதியளவு செடிகள் பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்திட வேண்டும்.

தழைச்சத்து அதிகரிக்கும் (Nutrition will increase)

கோடை பருவத்தில் பயிரிடப்படும் பசுந்தாள் பயிர் மூலம் நிலத்திற்கு தேவையான 20 சதவீத தழைச்சத்து இயற்கையாகவே நிலத்தில் அதிகரித்து, அடுத்து வரும் பயிருக்கு எளிதில் கிடைக்கிறது. மண்ணில் நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது.

இழப்பு குறைகிறது (The loss decreases)

கோடை உழவுக்குப் பிறகு பசுந்தாள் உரப் பயிரைச் சாகுபடி செய்வதால் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பை குறைக்கிறது.

காரத்தன்மையை நீக்க (To remove alkalinity)

காரத்தன்மை உள்ள மண்ணை சரி செய்வதற்கு பசுந்தாள் உரப்பயிர் உதவுகிறது. பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழுவதால் அவை நிலத்தில் கலக்கும்போது வெளிப்படும் கந்தக அமிலம், மணிச்சத்து உரத்தினை கரைத்து பயிருக்கு கிடைக்க வழி செய்கிறது.
களர் மற்றும் உவர் நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்கள் நன்கு வளர்ந்து நிலத்தை சீராக்குகின்றன.

உரச் செலவு குறைகிறது (Fertilizer cost decreases)

மண்ணின் வளத்தைப் பெருக்குவதோடு பயன்படுத்தப்படும் ரசாயன உரத்தின் அளவையும் குறைக்க உதவுகிறது. இதனால் உரத்திற்கு ஆகும் செலவு குறைகிறது.

மண் வளம் பெருகும் (Soil fertility is increasing)

எனவே, விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி தங்கள் நிலத்தில் சணப்பு, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு மண்ணில் அங்ககச் சத்துகளின் அளவை அதிகரிக்கச் செய்து மண்ணின் வளத்தைப் பெருக்கலாம்.

இவ்வாறு இரா.கஜேந்திரப் பாண்டியன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)