மலர்களைக் காணும்போது, மனதில் புத்துணர்ச்சி ஏற்படுவது உன்னதமான அனுபவம். அந்த வகையில், நம் மனதைக் கவரும் தன்னிகரில்லாத் திறன் படைத்தவை மலர்கள். அதனால்தான் மலர்கள் நன்கு வளம் சீதோஷன நிலை உள்ள மலைப்பிரதேசங்களில் அரசு சார்பில் தோட்டக்கலைப் பூங்காக்கள் வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
புதுவித ரோஜாக்கள்
அப்படி நீலகிரி மாவட்டம் குன்னுாரில் உள்ள சிம்ஸ் பூங்கா நர்சரியில், பச்சை நிறத்தில் ரோஜா மலர்கள் பூத்துள்ளன. புதுவிதமான நிறத்தில் பூத்துள்ள, மிக அரிதான இந்த பூக்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அரிய வகைத் தாவரங்கள் உள்ளன. குறிப்பாக, செலோசியா, ஜிப்சோபிலா, அன்ட்ரோனியா, பிகோனியா, பிளாக்ஸ், பேன்சி, பெட்டோனியா, ரோஜா உள்ளிட்ட மலர் நாற்றுக்கள் இங்குள்ள நர்சரியில் உருவாக்கப்பட்டுஉள்ளன.
குவியும் மக்கள்
இவற்றைக் கண்டுகளிப்பதற்காக ஆண்டுதோறும், இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அதிலும் சிறப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்துவருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்
இந்நிலையில், பூங்கா நர்சரியில் பச்சை ரோஜா தற்போது பூத்துள்ளது. இவற்றில் இருந்து பதியன் எடுத்து, செடிகள் வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதை வாங்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க...