பெரும்பாலும் அழகுப்படுத்தும் அல்லது சாலட் மூலப்பொருளாக மட்டுமே பயன்படுத்தப்படும் முள்ளங்கிகள், நிலையான விவசாய நடைமுறைக்கு ஏற்ற காய்கறி வகையாகும். முள்ளங்கியானது மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பூச்சி மேலாண்மைக்கு ஏற்ப உள்ளது கூடுதல் சிறப்பு. இந்த பகுதியில் முள்ளங்கியினை பயிரிடும் தன்மை என்ன? அவை எந்த வகையில் நிலையான விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பதனை காணலாம்.
முதன்மை பயிர்களுக்கு இடையில் ஊடுபயிராக முள்ளங்கியினை பயிரிடலாம் அல்லது தரிசு காலங்களில் பயிரிடலாம். முள்ளங்கிகள் உயிருள்ள தழைக்கூளமாக செயல்படுகின்றன, மண் அரிப்பு மற்றும் ஊட்டச்சத்து இழப்பில் இருந்து பாதுகாக்கிறது, அதே நேரத்தில் களை வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
முள்ளங்கி இரகங்கள்:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பின் படி, நீலகிரி சிகப்பு, ஒயிட்ஜசிக்க்ல், ஜப்பானிஸ்(நீர்) போன்ற முள்ளங்கி இரகங்கள் மலைப்பகுதிகளுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதைப்போல், சமவெளிப்பகுதிகளுக்கு கோ1, பூசாராஷ்மி, பூசாதேசி, ஜப்பானிஸ் ஒயிட், அர்கா நிஷாத் போன்ற முள்ளங்கி இரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
பொதுவாக முள்ளங்கியின் ஆழமான வேர்கள் மண் அடுக்குகளை ஊடுருவி, மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன. அறுவடையின் போது, முள்ளங்கியின் எச்சங்கள் மண்ணை கரிமப் பொருட்களால் வளப்படுத்தி, அதன் வளத்தையும், தண்ணீரைத் தக்கவைக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
மண்ணின் தன்மை:
அனைத்து வகையான மண்ணிலும், முள்ளங்கியை சாகுபடி செய்யலாம் என்றாலும்- அதிகமான விளைச்சல் வேண்டுமாயின் இயற்கை எரு மிகுந்த இலேசான மணல் சார்ந்த வண்டல் மண்ணை உபயோகிக்கலாம். இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அவற்றின் கார அமில அளவு 5.5 முதல் 6.8 வரை இருத்தல் நல்லது.
மேலும், முள்ளங்கி அலெலோபதி பண்புகளை வெளிப்படுத்துகிறது, சில களைகள் மற்றும் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் உயிர்வேதியியல் கலவைகளை வெளியிடுகிறது. செயற்கை களைக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளின் தேவையைக் குறைக்கிறது. இவை இயற்கையான களை ஒடுக்கும் பொறிமுறையாக செயல்படுகிறது.
பூச்சி மேலாண்மை பண்பு:
முள்ளங்கி பயிரானது பூச்சி மேலாண்மை ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் வேகமான வளர்ச்சி விகிதம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் தன்மை ஆகியவை அதிகப்படியான நைட்ரஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை திறம்பட அகற்றி, ஊட்டச்சத்து கசிவு மற்றும் நீர்வழிகளில் ஓடுவதைத் தடுக்கிறது. மேலும், முள்ளங்கிகள் லேடிபக்ஸ் மற்றும் வண்டுகள் போன்ற நன்மை பயக்கும் பூச்சிகளை ஈர்க்கின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் செயற்கை பூச்சிக்கொல்லிகளின் தேவையை குறைக்கின்றன மற்றும் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கின்றன.
பயிர் சுழற்சி முறைகளில் முள்ளங்கிகளை ஒருங்கிணைப்பது விவசாய சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலைத்தன்மையை மேலும் மேம்படுத்துகிறது.
விதைத்த 45 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகிவிடும் நிலையில், எக்டருக்கு 20 முதல் 30 டன் மகசூல் தாரளமாக பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
World Health Day 2024: உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் என்ன?
மாடுகளுக்கு வரிக்குதிரை மாடல் பெயிண்டிங்- பூச்சி தாக்குதலுக்கு தீர்வா?