புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டில் 36 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை பெற்ற சுமார் 300 சிறைவாசிகள் இருக்கிறார்கள். அவர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்கும், தண்டனைக் காலம் முடிந்து வெளியே செல்லும்போது சுயதொழில் செய்ய பல்வேறு பயிற்சிகளை சிறை நிர்வாகம் அளிக்கிறது.
அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த ஶ்ரீ அரபிந்தோ சொசைட்டி தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காகச் சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சிறையில் விவசாயம் (Farming in Prison)
பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றிப் புதர்மண்டிக் கிடந்த மண்ணை உழுது, பாத்திகள் பிரித்து, தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்து அசத்தியிருக்கிறார்கள் சிறைவாசிகள். பல மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 64 வகைப் பழச்செடிகள், 60 வகை மூலிகைச் செடிகளையும் நட்டு இயற்கை விவசாயம் நடக்கிறது.
வாழ்நாள் முழுதும் பழம் தரும் அன்னாசியை கொல்லிமலையிலிருந்து 10,000 செடிகளை கொண்டு வந்து பயிரிட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 1,350 வாழைகள், தக்காளி, கத்திரி, வாழை, தர்பூசணி, பப்பாளி, பச்சை மிளகாய், சுண்டக்காய், உளுந்து, சூரியகாந்தி, இஞ்சி, மஞ்சள், ஏலக்காய், ஆப்பிள், சாத்துக்குடி போன்றவற்றை பயிரிட்டு தினமும் சாகுபடி செய்து சிறையின் உணவு கூடத்தில் பயன்படுத்துகின்றனர்.
மேலும் படிக்க
வேளாண் பல்கலையில் வணிக முறைப் பயிற்சி: தொழில் முனைவோருக்கு அழைப்பு!
வேளாண் ஏற்றுமதி முனையம்: பல லட்சம் கிலோ விளை பொருட்களை சேமிக்கலாம்!