Horticulture

Tuesday, 03 September 2019 05:31 PM

பொதுவாக யூரியாவை நாம் செடிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறோம். அரசு யூரியாவிற்கு மானியமும் வழங்குகிறது. நிலங்களில் யூரியாவை பயன்படுத்துவதற்கு ஆதரவாக ஒரு சாராரும், எதிராக ஒரு சாராரும் இருந்து வருகின்றனர் எனலாம். அதே போன்று நிலங்களில் யூரியாவை பயன்படுத்தும் போது மிகுதியான அளவில் விரயமாகிறது. வேளாண் அறிஞர்கள் யூரியாவின் அளவை நிர்ணயித்த,  போதும் அதிக விளைச்சலுக்கு, மகசூலுக்கு விருப்பப்பட்டு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் பயன்படுத்துவதாக செய்திகள் வருகின்றன.

யூரியாவினை அதிக அளவில் பயன்படுத்தும் போது மண்ணின் உயிர் தன்மை மெல்ல மெல்ல குறைகிறது. இன்று அதிக அளவிலான விவசாகிகள் இயற்கை வேளாண்மை, ஜிரோ பட்ஜெட் விவசாயம் என பின்பற்ற தொடங்கியதால் யூரியாவின் பயன்பாட்டை குறைத்துள்ளனர்.  

காற்றிலேயே 78% நைட்ரஜன் (தழைசத்து) இருக்கையில், வெறும் 46% மட்டுமே தழைசத்து உள்ள யூரியாவினை எதிர்க்கின்றனர். காற்றில் கலந்துள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைத்து, செடிகளுக்கு அளிக்கும் நுண்ணுயிரிகளை பெருக வைத்தாலே போதுமனது. இயற்கை தந்த வரமான நாட்டு மாடுகளின் சாணம், மூத்திரம் கொண்டு செய்யபடும் இயற்கை உரங்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவை மண்னிற்கு தேவையான அனைத்து தழைசத்துகளையும் அளிக்கிறது.  ஜிரோ பட்ஜெட் விவசாயதின் அடிப்படை தத்துவமும் இதுதான்.

வேப்பம் புண்ணாக்கு அல்லது வேப்ப எண்ணெய் போன்றவற்றை மண்ணுக்கும் பயிர்களுக்கும் நேரடியாக அளிப்பதால் தழைசத்து வீணடிப்பு தடுக்கப்படுவதோடு, பூச்சி, பூன்ஜான் வேர் அழுகல் போன்ற பிரச்சனைகள் பெருமளவில் தடுக்கப்படும். அதே போன்று மண்ணுக்கு கிடைக்கும் நைட்ரஜனை ஆவியாகாமல் கட்டுபடுத்தவும் வேம்பு மிக சீரிய முறையில் செயல் படும்.

யூரியா பயன் பட்டை கட்டுப்படுத்த இயலாதவர்கள் இரண்டு பங்கு யூரியாவிற்கு, ஒரு பங்கு  வேம்பு கலந்து பயன்படுத்தினால் உங்கள் பணமும், மண்ணும், இயற்கையும் காக்கப்படும்.

இயற்கை வழியில் அதிக செலவு செய்யாமல் மண்ணையும் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் நம்மால் காக்க முடியும். அடுத்த தலை முறையை கருத்தில் கொண்டு மண்ணின் உயிரை மீட்போம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)