பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 10 December, 2020 8:06 AM IST
Credit : Tamil News Live

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான 25 ஆயிரம் ஏக்கர் சின்ன வெங்காய பயிர்கள், கனமழையால் நாசமடைந்திருப்பதால், அரசு இழப்பீடு தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வானம் பார்த்த பூமியான காரியாபட்டியில், ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங்குளம், சீகநேந்தல், மரைக்குளம், கல்லுப்பட்டி, முடுக்கன்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காய பயிர் பிரதானமாக பயிரிடப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது, புயல் காரணமாக தொடர் கனமழை நீடித்தது.

கண்ணீரில் விவசாயிகள் (Farmers in tears)

இந்த மழை காரணமாக, வெங்காய பயிர்கள் முற்றிலும் அழுகிய நிலையில் இருப்பதால், நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இவர்கள் ஒரு ஏக்கருக்கு இதுவரை சுமார் ரூ.75 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். கனமழை மட்டும் பெய்யாதிருந்தால்,  ஒரு ஏக்கரில் ரூ.1.50 லட்சம் வரை வெங்காய அறுவடையில் லாபம் பார்த்திருப்பார்கள். லாபம் கிடைக்காவிட்டாலும், தற்போது செலவுத்தொகையையும் சேர்த்து கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

நோய்கள் தாக்குதல் (Attack of diseases)

இதனிடையே இப்பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியாத வகையில், வேர் அழுகல், பயிர்க் காய்ந்து மடிதல் உள்ளிட்ட நோய்களால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. பூச்சி, பூஞ்சை மருந்துகள் தெளித்தும், விவசாயிகளால் தங்கள் பயிரை பாதித்த நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆண்டுக்கு ஒருமுறையே சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்கனவே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது புயல் மழை காரணமாக மேலும் இந்த ஆண்டு அறுவடைக்குத் தயாரான நிலையில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

மழையானது, நோயின் தாக்கத்தை மேலும் அதிகரித்தும் பாதிப்பையும் கொடுத்திருக்கிறது. தமிழக அரசு இப்பகுதி விவசாயிகளுக்கான இழப்பீட்டுத்தொகையை நிவாரணமாக வழங்கி விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டியது தற்போதைய அவசியம்.

பயிர்க்கடன் பெற்று தவிப்பு (Suffering from crop loans)

காரியாபட்டி பகுதி விவசாயிகள் கூறும்போது, பல ஆண்டுகளாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகிறோம். பயிர்க்கடன் பெற்று விவசாயம் மேற்கொண்ட நிலையில், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் பாதிப்புகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு கூட காப்பீடு செய்தும் சின்ன வெங்காய பயிருக்கு இழப்பீடு இதுவரை வழங்கவில்லை.

அதிகாரிகள் இழப்பீடுகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்கிட வேண்டும். நோய் தாக்குதல் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், அவர்களுக்கு இதுபற்றி புரியாததால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.

மேலும் படிக்க...

சமையல் சிலிண்டருக்கு மாற்றாக மாட்டுச்சாணத்தில் இருந்து Biogas - ரூ.12 ஆயிரம் மானியத்துடன்!

விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் ஈட்டலாம்- வேளாண்துறை அறிவுறுத்தல்!

இயற்கை தேனி வளர்ப்பாளர்கள் பக்கம் திரும்பிய வாடிக்கையாளர்கள் - தேனில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!

English Summary: Heavy rains at harvest time - 25 thousand acres of small onions wereted, farmers suffer in tears!
Published on: 10 December 2020, 07:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now