“HORTI UTSAV 2022” தோட்டக்கலை துறையில் இருக்கும் தற்போதைய முன்னேற்றங்கள், விவசாய மக்களை அறிவூட்டும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா முக்கியத்துவம் பற்றி விரிவாக காணலாம்.
தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலை கல்லூரி இணைந்து, கோயம்புத்தூரில், தனது முற்றிலும் பிரேத்யேகமான விழாவான “HORTI UTSAV 2022” ஐ வரும் ஜூலை 23 ஆம் தேதி நடத்த உள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருளை அதாவது திம்மாக, An Aesthetic Fest of Joy!”என தீர்மானிக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் பல்வேறு அறிவுசார் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் இடம்பெறும் என்பது குறிப்பிடதக்கது, தோட்டக்கலைத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் மாணவர்களை காட்சிப்படுத்த ஊக்குவிப்பதற்காகவும், அவர்களின் கலாச்சார திறன்களை மேம்படுத்தவும், இதுதவிர பங்கேற்பாளர்களை அறிவூட்டும் வகையில் இவ்விழா திட்டமிடப்பட்டுள்ளது..
கோவையில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கின்றனர் மற்றும் ஐந்து தோட்டக்கலை கல்லூரிகளில் இருந்து பங்கேற்பாளர்களாக இருக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றனர்.
விழாவிற்கு, கோயம்புத்தூர் HC மற்றும் RI, TNAU இன் முன்னாள் மாணவர் டாக்டர் வி.ஜே.சந்திரன் IPS, மற்றும் புதுச்சேரி, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை சிறப்பிக்க உள்ளனர். மாலையில் நடைபெறும் பாராட்டு விழாவின் போது மாணவர்களை கவுரவிப்பார். இச் சிறப்பு விழா மாண்புமிகு துணைவேந்தர் TNAU, Dr. V. கீதாலட்சுமி மற்றும் HC & RI, கோயம்புத்தூர் டீன், டாக்டர்.பி. ஐரீன் வேதமோனி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், இச் சிறப்பு விழா நடத்தப்பட உள்ளது.
நிகழ்வை முழுமையானதாகவும் அழகியல்மிக்கதாகவும் மாற்ற, பல்வேறு கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் வினாடி வினா, பழங்கள் மற்றும் காய்கறிகளை செதுக்குதல், ஹேண்ட்ஸ்கேப்பிங், தீயில்லா சமையல், பாடுதல், நடனம் போன்றவை விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட உள்ளன. இது மாணவர்களுக்கு உதவும் தோட்டக்கலையின் அழகியல் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அவர்களின் படைப்பாற்றலைத் தூண்டுகிறது. ஒரு அறிவியல் பல்வேறு தோட்டக்கலை கருத்துகளின் அடிப்படையில் கண்காட்சியும் மாணவர்களால் நடத்தப்பட உள்ளது. அனைத்து தோட்டக்கலை கல்லூரிகளின் மாணவர்கள் www.hortiutsav2022.com என்ற இணையதளத்தில் உள்நுழைந்து பசிவு செய்யலாம், மற்றும் ஆர்வமுள்ள நிகழ்வுகளுக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்யவும்.
மேலும் படிக்க:
15 நாட்களில் சுகர் ஓடிப்போகும்- நெல்லி- மஞ்சள் ரகசியம்!
விவசாயிகளுக்கு ரூ.3000 வழங்கும் திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி?