சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 24 December, 2020 6:07 PM IST
Credit : pinterest

பண்டிகைகள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில், அன்பை பறிமாறிக் கொள்வதற்கு, பசுமை பரிசு பெட்டகம் (Green Gift Box) என்ற புதிய திட்டத்தை, தோட்டக்கலைத் துறை (Horticulture Department) துவக்கிஉள்ளது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள், பரிசுகளை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பசுமைப் பரிசு பெட்டகம்:

பண்டிகை மற்றும் விழாக்காலங்களில், அன்பை பரிமாறிக் கொள்வதற்கு, பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்குவது வழக்கம். இதை கருத்தில் வைத்து, சுற்றுச்சூழலை (Environment) பாதுகாக்கும் வகையில், பசுமை பரிசு பெட்டகம் என்ற, புதிய திட்டத்தை (New Scheme) தோட்டக்கலைத் துறை துவக்கி உள்ளது. இந்த திட்டத்தின்படி, தொட்டியுடன் கூடிய பூச்செடி அல்லது அலங்கார செடி அல்லது துளசி உள்ளிட்ட மூலிகை செடி (Herbal), டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் மற்றும் காய்கறி விதை பாக்கெட் (Vegetable Seed pocket) மற்றும் காகிதப் பை ஆகியவை அடங்கிய பரிசுப் பெட்டகம், 100 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளன.

விற்பனை இடம் (ம) நேரம்:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு (New Year) கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னை, அடையாறு, கஸ்துாரிபாய் நகர் நல சங்க அலுவலகம், அண்ணாநகர் தோட்டக்கலை மூலிகை பண்ணை, மாதவரம் தோட்டக்கலை பண்ணை மற்றும் செயல் விளக்க பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா (Semmozhi Park) ஆகியவற்றில், இந்த பசுமை பரிசுப் பெட்டக விற்பனை துவங்கியுள்ளது. காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை விற்பனை நடக்க உள்ளது. மொத்தமாக பசுமைப் பரிசு பெட்டகத்தை வாங்குபவர்களுக்கு சலுகைகள் (Discounts) வழங்க, தோட்டக்கலை துறை இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலை காக்க, தோட்டக்கலை துறையின் இந்த பரிசுப் பெட்டகத்தை வாங்கி பயனடையுங்கள். சுற்றுச்சூழலும் காக்கப்படும், விரும்பியவர்களுக்கு நல்ல பரிசை அளித்த மனத்திருப்தியும் கிடைக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பிரம்மாண்ட மாடித் தோட்டத்தை அமைத்த மணலி மண்டலம்!

இயற்கை விவசாயத்தை கையிலெடுத்த தருமபுரி விவசாயிகள்! குறைந்த செலவில் அதிக மகசூல்!

English Summary: Horticulture Department's New Gift Scheme! Green Gift Box!
Published on: 24 December 2020, 06:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now