Horticulture

Wednesday, 07 August 2019 11:46 AM

சமீபகாலமாக ஆர்கானிக் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. எனினும் நம்மில் பலருக்கும் ஆர்கானிக் என்றால் என்ன?, எவ்வாறு கண்டறிவது, யாரிடம் வாங்குவது என பலப்பல கேள்விகள் தோன்றும். உங்களின் அனைத்து வித கேள்விகளுக்கும் இந்த கட்டுரை முறுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம்.

ஆர்கானிக் மீதான மோகத்தால் இன்று பெரும்பாலான வியாபாரிகள் ஆர்கானிக் என்னும் யுக்தியை பயன்படுத்தி லாபகரமாக சம்பாதிக்கிறார்கள். நாமும் மூன்று மடங்கு விலை உயர்வு என்றாலும் வாங்கிவிடுகிறோம். நம் அறியாமை அவர்களின் மூலதனம் என்பதை உணர வேண்டும்.

ஆர்கானிக் என்றால் என்ன?

ஆர்கானிக் என்றால் இயற்கை என கூறுவது தெரிகிறது. பெரும்பாலானோர் அதிகளவு ரசாயன பொருட்களை கொட்டி குறைந்த நாளில் அதிக மகசூல் என வீரியம் மிகுந்த விதைகளையும், உரங்களையும் பயன்படுத்தி நமக்கு நாமே கெடுதல் செய்து கொண்டோம். இழந்ததை மீட்க பழமையை நோக்கி பயணிப்போம். ஆம் நமது பாரம்பர்ய விவசாயத்தை நடை முறை படுத்துவோம். நாட்டு விதை, இயற்கை உரம், இயற்கை  பூச்சி விரட்டி போன்றவற்றை பயன்படுத்தி கிடைக்கும் பொருட்கள் தான் ஆர்கானிக் காய்கறிகள் / பழங்கள் ஆகும்.

ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை எவ்வாறு கண்டறிவது?

  • நம்மில் பலருக்கும் தோன்றும் சந்தேகம் தான். முதலில் அவ்வகை பொருட்களை நாம் நேரடியாக விவசாகிகளிடமிருந்து  பெறுகிறோமா அல்லது கடைகளில் வாங்குகிறோமா அல்லது வணிக வளாகங்களில் உள்ள கடைகளில்  வாங்குகிறோமா அல்லது ஆன்லைன் மூலம் வாங்குகிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும். 
  • விவசாகிகளை தவிர மற்றவர்களிடம் வாங்கும் போது முடிந்தவரை கேள்வி கேளுங்கள், எந்த விவசாய பண்ணையில் இருந்தது வாங்கப் பட்டது, எங்கிருந்து வருகிறது என்று. பதில் சொல்ல தயங்கும் அல்லது தவிர்க்கும் வியாபாரிகளிடம் வாங்காதீர்கள். ஆரோக்கியமானது என்றால் அழகாக இருக்காது என்பதை சற்று நினைவில் கொள்ளுங்கள்.
  • நம்மில் பலருக்கும் இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு உண்டு. ஆனால் நமக்கு போலி எது அசல் எது என்று  கண்டுபிடிப்பது சற்றே கடினம். என்றாலும் முடிந்தவரை கீழே குறிப்பிட்டுள்ள ஆலோசனைகளை முயற்சித்து பாருங்கள்.
  • ஆர்கானிக் பொருள்களுக்கு என்று  தனி மணம் உண்டு, இதை உணர மட்டுமே முடியும். தோல் மிருதுவாகவும், பளபளப்பு இல்லாமல் சற்று சுருங்கியும் காணப்படும். உதாரணதிற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி எடுத்துக் கொள்வோம், பிரிட்ஜ்ல் வைக்காமல் ஒரு வாரம் வரை கெடாமல் தோல் மட்டும் சுருங்கினால் அது ஆர்கானிக்.
  • ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள் என்றால்  பிரத்யேக மணமும் மிகுந்த சுவையும் கொண்டு வெவ்வேறு வடிவிலும், நிறத்திலும் இருக்கும்.  ஒரே வடிவத்திலும் ஒரே நிறத்திலும் இருந்தால் அது போலி.
  • பொதுவாக ஆர்கானிக் விவசாயத்தின் மூலம் விளையும் விளைபொருள்களில் 20 முதல் 25 சதவிகிதம் வரை வண்டுகள், பூச்சிகள் இருக்கத்தான் செய்யும். நாம் வண்டுகள் தாக்கிய பகுதிகளை மட்டும் அப்புறப் படுத்திவிட்டு தாராளமாகப் பயன்படுத்தலாம்.
  • நம்மாழ்வார் கூறும் போது கீரைகள், பார்ப்பதற்கு பளீர் பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்லதில்லை,    குறைந்தபட்ச இலைகளையாவது பூச்சிகள் அரித்துள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும்.  ஏனெனில், ரசாயனம் தெளித்த கீரையை பூச்சிகள் நெருங்க வாய்ப்பில்லை.
  • ஆர்கானிக் காய்கறிகள் சமைக்கும் போது விரைவில் வெந்து விடும். அதன் சுவையிலும் வித்தியாசம் தெரியும்.

நவீன உலகில் நாம் உண்ணும் பொருளை கலப்பிடமில்லால், ரசாயனம் இல்லாமல் பெறுவதற்கு ஏற்ற வழி விவாசகிகளிடம் நேரடியாக வாங்குவது அல்லது நாமே தோட்டம் அமைத்து நமக்கு தேவையான காய்கறிகள், பழங்களை விளைவித்து கொள்ளலாம். 

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)