நெல் சாகுபடியின்போது, வரப்பில் உளுந்து, தட்டைப் பயறு போன்ற பயறு வகைகளை பயிரிட்டால் பூச்சி மற்றும் நோய்களை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.
நெல் சாகுபடி (Paddy Cultivation)
இது குறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
-
தற்போது பருவமழை பெய்துள்ளதால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வரப்பில் துவரை, உளுந்து, தட்டைப்பயறு போன்ற பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்து பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்தி பயனடையலாம்.
-
நெல் சாகுபடி மேற்கொள்ளும் வயலின் வரப்பில் ஒரு எக்டருக்கு 3 கிலோ உளுந்து அல்லது தட்டைப் பயறு விதைகளை வரப்பின் ஓரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் விதைக்கலாம். துவரை விதைகளை வரப்பின் ஓரத்தில் விதைக்கலாம்.
-
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் எக்டருக்கு 3 கிலோ பயறு விதை ரூ.150 அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்த அளவு மானியத்தில் வழங்கப்படுகிறது.
-
பயறு வகைப் பயிர்களை வரப்பில் விதைப்பதால் அவற்றை நோக்கி கவரப்படும் பொறிவண்டு போன்ற நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகின்றன. இவை நெற்பயிரைச் சேதப்படுத்தும் தத்துப்பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை தாக்கி கட்டுப்படுத்தும்.
-
பயறு உற்பத்தி அதிகமாகி சாகுபடிச் செலவின்றி மகசூல் கிடைக்கிறது. அவற்றின் தழைகள் ஆடு, மாடுகளுக்குச் சிறந்த புரதச்சத்து மிகுந்த தீவனமாக பயன்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
வேம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.18,000மானியம்- விவசாயிகளுக்கு வாய்ப்பு!
காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!