இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 16 September, 2021 9:10 AM IST

நெற்பயிரில் சிக்கனமாக நீர்பாய்ச்சும் நுட்பத்தைத் தெரிந்துகொண்டால், அதிக மகசூல் பெறுவது எளிதில் சாத்தியம் என வேளாண் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

லாபகரமான விவசாயம் (Profitable agriculture)

நெற்பயிருக்கு 1150 முதல் 1200 மி.மீ நீர் தேவைப்படும். அதை விட அதிகமாக நீர் பாய்ச்சினால் ஆவியாகும், மண்ணில் ஊடுருவிச் செல்லும். எனவே சிக்கனமாக நீர் பாய்ச்சி அதிக மகசூல் பெறுவதே லாபமான விவசாயத்திற்கு அடிப்படை.

நீர் நிர்வாகம் (Water management in the nursery)

  • விதைத்த 18-24 மணி நேரத்திற்குள் தண்ணீரை வடித்து விதை முளைக்க வழி செய்ய வேண்டும்.

  • குண்டு குழிகளில் தேங்கி நிற்காதவாறு பாத்தி அமைப்பு இருக்க வேண்டும்.

    விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீர் கட்டுவது, தண்ணீர் தேங்காதவாறு இருக்க வேண்டும்.

  • ஐந்தாவது நாளிலிருந்து நாற்றின் வளர்ச்சிக்கேற்ப நீரின் உயரத்தை அதிகரிக்கலாம். அதிக பட்சமாக ஒரு அங்குல ஆழ நீர் கட்டுவது சிறந்தது.

 வயல் நீர் நிர்வாகம் (field water management)

  • சேற்று உழவும், உழுத நிலத்தை சமன் செய்வதும் நீரின் தேவையைக் குறைக்கின்றன.

  • இரும்புச் சக்கரக் கலப்பை மூலம் சேற்றுழவு செய்யும்போது நீர் மண்ணினுள் ஊடுருவி வீணாவது 20 சதவீதம் தடுக்கப்படுகிறது.

  • வயலில் மடக்கி உழப்பட்ட பசுந்தாள் உரம் நல்ல முறையில் மட்குவதற்கு ஒரு அங்குலம் அளவுக்கு நீர் நிறுத்தப்படவேண்டும்.

  • குறைவான நார்த்தன்மையுடைய சணப்பை, தக்கைப்பூண்டுக்கு 7 நாட்களும் அதிக நார்த்தன்மையுடைய கொளுஞ்சிக்கு 15 நாட்களும் நீர்தேவை. அதன்பின்பே நடவு செய்யவேண்டும்.

நடவு செய்யும்போது (When planting)

தண்ணீரின் அளவு சேறும் சகதியுமாய் இருந்தால் தான் சரியான ஆழத்தில் நடுவதற்கும் அதிக துார் பிடிப்பதற்கும் உதவும். நட்ட ஒரு வாரத்திற்கு ஒரு அங்குலம் நீரைத் தேக்கவேண்டும். இது துார் பச்சை பிடிக்கும் காலம் என்பதால் நீர் அளவு குறையக்கூடாது.கொண்டைக் கதிர் பருவத்திற்கு பின் 2 அங்குலத்திற்கு மேல் ஆழமாக நீர் பாய்ச்சினால் வேரின் திறன் பாதிக்கப்பட்டு அழுகி விடும்.

கதிர் சரியாக வெளிவராமலும் வந்த கதிர்களில் நெல் மணிகள் சரிவர முதிர்ச்சியடையாமலும் வீணாகி விடும்.நீர் தேங்கினால் வடிகால் அமைத்து நீர் மறைந்தபின் கட்ட வேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பாக கடைசி நீர் கட்ட வேண்டும்.

வரப்பு அமைத்தல்

ஒவ்வொரு வயலும் 25 முதல் 50 சென்ட் உள்ளதாக அமைக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வயல்களின் நான்கு புறமும் வரப்பிற்கு உட்புறமாக 30 - 45 செ.மீ. இடைவெளியில் கை வரப்பு அமைத்து தண்ணீர் தேவையைக் குறைக்க வேண்டும்.

நீர்பிடிப்பு உள்ள நிலப் பகுதிகளில் வயலின் மத்தியிலும், குறுக்காகவும் 2 அடி ஆழத்திற்கு 1.5 அடி அகலத்திற்கு வடிகால் அமைக்கலாம்.

மேலும் படிக்க...

போராட்ட களத்தை மாற்றினர் விவசாயிகள்: ஜந்தர் மந்தரில் தீவிர போலீஸ் பாதுகாப்பு!

English Summary: How to maintain water conservation in neem crop? - Simple tips!
Published on: 15 September 2021, 09:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now