Horticulture

Friday, 02 August 2019 04:06 PM

பச்சை மிளகாய் பொதுவாக அன்றாட உணவுகளில் அதிகளவு பயன்படக்கூடிய ஒன்று. சைவம், அசைவம் என இரண்டு உணவுகளிலும் அதிகம் பயன்படும் பயிராகும். மேலும் மிளகாய் சாகுபடியில் நன்கு விவசாயம் தெரிந்தவராக இருந்தால் எல்லா காலங்களிலும் விவசாயம் செய்து நல்ல லாபம் ஈட்ட முடியும்.

நிலம்

மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மிளகாய் முக்கிய பயிராகும் மற்றும் சம்பா ரகங்களை விட மானாவாரி ரகங்களே அதிகம்.

பச்சை மிளகாய் சாகுபடியில் ஆரம்ப கால விதை முளைத்தல், இளம் செடிகளின் வளர்ச்சி ஆகியனவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மானாவாரி நாற்றங்காலில் ஏற்படும் பயிர் இழப்பு  ஆகியனவையும் முக்கியப் பிரச்னைகளாகும்.

ரகங்கள்

சம்பா ரகங்கள்: கோ.1, கோ.2, கோ.1, கோ.3,

குண்டு ரகங்கள் : கோ.2, பிஎம்கே 1, பிஎல்ஆர் 1, (பாலூர் 1)

பருவம்

ஜனவரி, பிப்ரவரி, ஜூன், செப்டம்பர்.

விதையளவு

எக்டருக்கு ஒரு கிலோ

நாற்றங்கால் அமைத்தல்

1 ஏக்கர் நடவு செய்ய 100 சதுர மீட்டர் அளவில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். விதைகளை விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடோமாவிரிடி அல்லது 2 கிராம் கேப்டான் திரவம் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைகளை மேட்டுப் பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் சீராக விதைக்க வேண்டும். 40-50 வயதுடைய நாற்றுகள் நடவு செய்ய ஏற்றவை.

இடைவெளி

கோ.3 ரகத்திற்கு 30-15 செ.மீ மற்ற ரகங்களுக்கு 45-30 செ.மீ

அடி உரம்

எக்டருக்கு தொழு உரம் 25 டன்  தழை மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 30: 60: 30 கிலோ என்ற விகிதத்தில் இடவேண்டும்.

மேல் உரம் இடுதல்

எக்டருக்கு தழைச்சத்து 30 கிலோவினை நடவு செய்த 30, 60, மற்றும் 90-ஆவது நாட்களில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

களை நிர்வாகம்

எக்டருக்கு ஃபுளுகுளோரலின் 1 லிட்டர் என்ற ஃப்ரிஎமர் ஜென்ஸ் களைக்கொல்லி மருந்தை தெளிக்க வேண்டும். பின்னர் 45 நாட்கள் கழிந்து மண் அனைக்கும்பொழுது களைக்கொத்து கொண்டு களை எடுக்க வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்     

நடவு செய்த 20, 40, 60, மற்றும் 80 - ஆம் நாட்களில் டிரைகாண்டினால் என்ற வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீருக்கு 12.5 மிலி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும். காய்பிடிப்பு திறனை அதிகரிக்க என்.ஏ.ஏ என்ற வளர்ச்சி ஊக்கியை 10 பி.பி.எம். வீதம் நடவு செய்த 60 மற்றும் 90 நாளில் தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

* காய்துளைப்பான், அசுவினி, இலைப்பேன் .

* எக்டருக்கு 12 எண்கள் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைப்பதால் தாய்ப்பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.

* வளர்ந்த புழுக்களையும் பாதிக்கப்பட்ட காய்களையும் சேகரித்து அழித்தல்

* பேசில்லஸ் துரின்சென்சிஸ் எபிட்ரா உயிர் மருந்தை 2 கிராம் / லிட்டர்  நீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.

* எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, அரிசி தவிடு 1.25 கிலோ, வெல்லம் 1.25 கிலோவுடன் 7.5 லிட்டர் நீரைக் கலந்து விஷ உணவு தயாரித்து வைப்பதன் மூலம் அழிக்கலாம்.

* கார்பரில் 5 கிராம் / லிட்டர் நீர் அல்லது குளோர்பைரிபாஸ் 20 மிலி / லிட்டர் நீர் அல்லது குயினால்பாஸ் 2.5 மிலி / லிட்டர் நீர் அளவில் கலந்து தெளிக்கலாம்.

நோய்கள்

நாற்றழுகல் நோய்

விதைகளை விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நாற்றங்காலில்  காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தை 2.5 கிராம் / லிட்டர் நீர் என்ற விகிதத்தில் கலந்து சதுர மீட்டருக்கு 4 லிட்டர் கரைசல் வீதம் ஊற்றவேண்டும்.

சாம்பல் நோய்

நனையும் கந்தகம் 2 கிராம் லிட்டர் / நீர் அல்லது கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் நீர் என்ற விகிதத்தில் 15 நாள் இடைவெளியில் 3 முறை தெளிக்கவேண்டும்.

இலைக்கருகல் - பழ அழுகல் நோய்

நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் நீர் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் / லிட்டர் நீர் என்று விகிதத்தில் கலந்து 15-ஆம் நாள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

மகசூல்

210 - 240 நாட்களில் எக்டருக்கு 10 - 15 டன் பச்சைக் காய்களும் 2 - 3 டன் காய்ந்த மிளகாய் மகசூலாகக் கிடைக்கும் .   

 https://tamil.krishijagran.com/horticulture/chilli-cultivation-in-tamil-nadu/     

K.Sakthipriya
Krishi Jagran 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)