பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 December, 2020 8:57 AM IST
Credit : Plantwise

நெற் பயிரில் (Paddy) தாக்கும் பலவகைப் பூச்சிகளையும், அவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் பார்ப்போம்.

பச்சை தத்துப்பூச்சி

  • ஐ. ஆர் 50, சி ஆர் 1009, கோ 46, பட்டாம்பி 2 மற்றும் 18 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.

  • விளக்குக் கம்பத்தின் அருகில் நாற்றாங்கால் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.

  • 20 சென்ட் நாற்றாங்காலுக்கு 12.5 கிலோ வேப்பபுண்ணாக்கினை இட வேண்டும்.

  • நாற்று நட்ட நாள் முதல்  3 நாட்கள் வரை 2.5 சென்டி மீட்டர் அளவு நீரானது இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.

பழுப்புஇலை தத்துப்பூச்சி

  • பையூர் 3, கோ 42, ஆஷா, திவ்யா, அருணா, கர்நாடகா, கார்த்திகா, கிருஷ்ண வேணி போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

  • நடவு வயலில் ஒவ்வொரு 2.5 மீட்டர் அகலத்திற்கும் 30 சென்டி மீட்டர் இடைவெளி விட வேண்டியது கட்டாயம்.

  • தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுதல்.

  • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.

  • 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு (25 கிலோ / ஹெக்டர்) அல்லது 2 சதவிகித வேப்பஎண்ணெய் (10 லிட்டர் / ஹெக்டர்) தெளிக்க வேண்டும்.

வெண் முதுகு தத்துப் பூச்சி

முட்டை ஒட்டுண்ணியான , அனாகிரஸ் எனும் பூச்சியின் முதிர்பூச்சி மற்றும் இளங்குஞ்சுகளை வயலில் விடுவிக்கலாம்.

மாவுப் பூச்சி:

  • நாற்று நடுவதற்கு முன்பாக வரப்புகளில் உள்ள புற்களையும், களைகளையும் அகற்ற வேண்டும்.

  • தாக்கப்பட்ட பயிர்களையும் சேர்த்து அழிக்க வேண்டும்.

நெல் கருநாவாய்ப் பூச்சி

  • களைகள் இல்லாமல் நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும்.

  • தேவைக்கு அதிகமான நீரை அகற்ற வேண்டும்.

  • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.

  • கருநாவாய்ப் பூச்சிகளை, வாத்துகளை  நாற்றுகளில் விடுவதன் மூலம் கட்டுப்படுத்துதல்.

கதிர் கருநிற நாவாய்ப் பூச்சி

  • வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம்.

  • நொச்சி இலைப் பொடியின் சாறு 5 சதம்.

நெல் தண்டுதுளைப்பான்

  • ரத்னா, ஜெயா, டி.கே.எம் 6 , ஐ. ஆர் 20 & 26 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.

  • நாற்றுப் பறித்து நடவு செய்வதற்கு முன் நாற்றின் நுனியைக் கிள்ளி எடுத்தல் வேண்டும்.

  • இதனால் பூச்சிகளின் முட்டைகளையும் அகற்றலாம்.

  • முட்டைகளை சேகரித்து அழித்தல்.

  • பாதிக்கப்பட்ட கொத்தினை பிடுங்கி அழித்தல்.

  • டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30-வது மற்றும் 37-வது நாட்களில் விட வேண்டும்.

தகவல்

ச.சுப்பையன்
வேளாண்மை உதவி இயக்குநர்
கொள்ளிடம்

மேலும் படிக்க...

Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

Amla benefits: குளிர்கால சிக்கல்களிலிருந்து உங்களை காக்கும் "நெல்லிக்கனி"- இயற்கையின் வரப்பிரசாதம்!!

English Summary: Insects that attack rice- Natural remedies to help control!
Published on: 23 December 2020, 08:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now