பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் ரபி பருவப் பயிர்களுக்கு விவசாயிகள், பயிர் காப்பீடு (Crop Insurance) செய்து பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:
-
மத்திய அரசு 2000-21ஆண்டு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் (Pradhan Mantri Fasal Bima Yojana) சில மாற்றங்களைச் செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
-
அதன்படி இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெற விரும்பும் விவசாயிகள் அவர்கள் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
மாவட்ட, பயிர் வாரியாக சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் ரபி 2020-21றை செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
-
ரபி பருவ நெல்(Paddy), மக்காச்சோளம்(Corn), ராகி(Ragi), கரும்பு(Sugarcane), உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை(Ground nut), பருத்தி(Cotton) ஆகிய பயிர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
-
இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விரும்பும் விவசாயிகள், இத்திட்டத்தை செயல்படுத்தும் இப்கோ போகியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவைகள் மூலமாகவோ, வங்கிகள் அல்லது
-
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்
-
இத்திட்டத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும், அறுவடை காலத்திற்குப்பின் ஏற்படும் இழப்பிற்கும், பயிர் காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதால் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்
-
நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்ய 18.1.2021 இறுதி நாளாகவும், நெல், உளுந்து, மற்றும் பச்சை பயிறு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய 15.2.2021ம். பருத்தி, மக்காச்சோளம், ராகி ஆகிய பயிர்களுக்கு 1.3.2021ம், கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய 31.10.2021ம் இறுதி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.496.50ம், உளுந்து மற்றும் பச்சை பயிர்களுக்கு ரூ.248.25ம், ராகி பயிருக்கு 167.50ம், நிலக்கடலை பயிருக்கு 364.50ம், மக்காச்சோள பயிருக்கு ரூ.320.40ம், பருத்தி பயிருக்கு 1342.50ம், கரும்பு பயிருக்கு 2,006ம் செலுத்தி இந்த திட்டத்தில் தங்களது பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
-
ஆதார் எண்
-
சிட்டா அடங்கல்
-
வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
-
மார்பளவு புகைப்படம்
போன்ற ஆவணங்களுடன் விவசாயிகள் கணினி மையத்திற்கு சென்று, பதிவேற்றம் செய்து பயிர் காப்பீடு நிடத்தில் இணைந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வறுமையை ஒழித்துக் கிராமங்களை வளமாக்கும் MGNREGA !!
டெல்லியில் போராடும் விவசாயிகள் - NDA தலைவர்களைச் சந்திக்க முடிவு!
மழையால் வெளியேறும் உரஇழப்பைத் தடுக்க - நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்!!