Horticulture

Wednesday, 06 July 2022 06:40 AM , by: Elavarse Sivakumar

கோவையில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நோனி, தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதேபோல், பூச்சியியல் துறை தேனீ வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற்று, தொழில் அதிபராக மாற விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நோனி. தக்காளி மற்றும் பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 6.7.22 மற்றும் 7.7.22 ஆகிய நாட்களில் கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

நோனி பிளைன், நோனி - குவாஷ், நோனி - ஊறுகாய், நோனி - ஜாம்
தக்காளியில் இருந்து சாஸ், கெட்சப், பேஸ்ட, பியுரி, பப்பாளியில் இருந்து ஜாம், ஸ்குவாஷ், கேண்டி ஆகியவைத் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும். இதில் பங்கேற்க,ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500/- + GST 18%) - பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நடைபெறும் இடம்

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. என்ற முகவரியில் பயிற்சி நடைபெறும்.

தொடர்புக்கு

கூடுதல் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் என்ற முகவரியிலும், 0422-6611268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 

தேனீ வளர்ப்பு பயிற்சி

இதனிடையே வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக  தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி ஜூலை 6ம் தேதி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள்

தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல்
பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம்
தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம்
தேனைப் பிரித்தெடுத்தல்
தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம்

கட்டணம்

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், பயிற்சி நாளன்று,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்ப்பித்து பயிற்சிக் கட்டணம் ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) நேரிடையாக செலுத்த வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். கோயம்புத்தூர், தொலைபேசி : 0422 - 6611214, மின்னஞ்சல்: entomology@tnau.ac.in. ஆகியவற்றில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க...

சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!

வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)