Horticulture

Saturday, 23 October 2021 07:14 AM , by: Elavarse Sivakumar

Credit : Tractor

பல மைல் தூரம் நடந்து சென்று குடிநீர் சுமந்துவரும் கொடுமை, இன்னும் நம் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறது. இதனை முற்றிலும் தடுக்கும் விதமாக மத்திய அரசால் உருவாக்கப்பட்டதே ஜல் ஜீவன் திட்டம்.

குடிநீர் தட்டுப்பாடு (Drinking water shortage)

அத்தியாவசிய தேவையாகும். அதனால்தான் நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். நமது நாட்டிலுள்ள கிராமப்புறங்களில் குடிநீருக்காக மக்கள் வெகுதூரம் அலைந்து சென்று,  இன்னல்பட்டு எடுத்து வரும் நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது. .

ஜல் ஜீவன்  திட்டம் (Jal Jeevan Project)

இந்தத் துயரத்தைப் போக்குவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15 தேதி ஜல் ஜீவன் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின்படி, அனைத்து கிராமப்புறங்களுக்கு 2024க்குள்  சுத்தமான குடிநீர் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மிகவு‌ம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மத்திய -மாநில அரசு மற்றும் பயனாளிகள் பங்கேற்புடன்
இந்தத் திட்டம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

25,0000 இணைப்புகள்

இதில் மத்திய அரசின் நிதி 50%மும், மாநில அரசின் நிதி 40%மும் இடம்பெற்றுள்ளது. பயனாளிகள் நிதி 10% என்ற கணக்கில் பங்கீட்டு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திட்டம் ஆரம்பித்த இரண்டு
ஆண்டுகளில் மட்டும் 5கோடி பேருக்கு குடிநீருக்காக இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 25,0000 இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல்.

இந்த திட்டம் மத்திய அரசு முழுமையான பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது. இது மட்டுமல்ல இத்திட்டத்திற்காக யார் வேண்டுமானாலும், நன்கொடை வழங்க
முன்வரலாம்.

ராஷ்ட்ரீய ஜல் ஜீவன் கோஸ்

அவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகளைக் கொண்டு ராஷ்ட்ரீய ஜல் ஜீவன் கோஸ் என்ற அமைப்பு உருவாக்க பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதார தேவையான குடிநீருக்காக இந்தத் தொகை செலவிடப்படும்.

தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆண்டுக்கான
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)