பொங்கல் பண்டிகையில் முதல் நிகழ்ச்சியானக் காப்புக் கட்டும் பாரம்பர்யமானக் பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் பின்னணி என்று தெரிந்துகொள்வது, இந்தக் கொரோனாக் காலத்தில் மிக மிக முக்கியம்.
போகிப் பண்டிகை
பொதுவாகத் தைப்பொங்கல் 4 நாள் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இதில் முதல் நிகழ்ச்சியே போகிப் பண்டிகைதான்.
வீடு முழுவதும் சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடித்துப் பழையனவற்றைத் தீக்கு இரையாக்குவதே போகி. மேலும் போகிப் பண்டிகை அன்று, பட்டி தொட்டி மட்டுமல்லாமல், நகர்ப்புறம் முழுவதும், வீடுகள் வாகனங்கள், மற்றும் நிலங்களில் காப்பு கட்டுதல் என்ற நிகழ்வு பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
காப்புக்கானச் செடிகள்
காப்பு கட்டுவதற்கு பல்வேறு வகையானச் செடிகளை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். அவற்றில் பின்வருபவை முக்கியமானவை.
-
கண்ணுப்பிளைசெடி
-
ஆவாரம்பூ
-
வேப்பிலை
-
தும்பை
-
நாயுருவி
-
கம்பங்கதிர்
-
மாவிலை
ஆரம்ப காலத்தில் இந்த வகைச் செடிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில்,தற்போது அல்லது 3 வகையான செடிகளை தை முதல் நாளில் அதிகாலை வேளையில் ஈசானிய முலையில் காப்பு கட்டுகின்றனர். இதற்கு பலர் பலவிதமானக் காரணங்கள் கூறப்படுகிறது.
நோய் காலம் (Disease period)
தை முதல் நாளில் உத்தராயணம் காலம் ஏற்படுவதாலும், பருவகால மாற்றம் எற்படுவதாலும் அதிக வெப்ப தாக்குதலால் கடும்நோய்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கு கின்ற சூழல் உருவாக கூடிய காலமாகும்.
அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக நமது முன்னோர்கள் இந்த காப்புகட்டும் நிகழ்வை ஒரு சம்பிரதாய மாக செய்தனர். ஆக, உத்தராயணக் காலத்தில் எற்படும் வெப்ப அழற்சி, உடல் உபாதைகளை தடுக்கப் பயன்படும் மருந்து பெட்டகமாக இந்தக் காப்பு செடிகள் பயன்படுகின்றன. அந்த காலத்தில் மருத்து வசதிகள் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு வீட்டு முற்றத்தில், இவை தோரணமாக செருகி வைக்கப்பட்டன.
பாதுகாத்துக்கொள்ள (To protect)
மருந்துச் செடிகளைத் தேடி அலையாமல் மருத்துவம் உடனுக்குடன் பார்ப்பதற்கு வசதியாக இந்த செடிகள் கட்டப்பட்டது என்பதும், மற்றொரு காரணமே. எனவே நாமும் நம்முடையப் பாரம்பரியத்தை போற்றுவோம். இதன்மூலம் கடுமையான தொற்று நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
சம்பா நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயி!
கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் பாதிப்பு: பெருங் கவலையில் விவசாயிகள்!