அவரைக்காய் சாகுபடி
நாட்டுக் காய்கறிகளில் ஒன்றான அவரைக்காயில் இருவகைகள் உள்ளன. ஒன்று செடியில் காய்ப்பது (குற்று அவரை) இந்த ரகத்தை ஆண்டு முழுவதும் (120 நாள்கள்) பயிரிடலாம். இரண்டாவது கொடியில் காய்ப்பது (பந்தல் அவரை) இந்த ரகத்தை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் (240 நாட்கள்) சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அவரை சாகுபடிக்கு ஏற்றது.
இரகங்கள்
குற்றுச்செடி வகை (Shrub type)
கோ 6, கோ 7, கோ 8, கோ 9, கோ 10, கோ 11, கோ 12, கோ 13, கோ (ஜிபி) 14, அர்கா ஜாய் மற்றும் அர்கா விஜய்.
பந்தல் வகை (Bandal type)
கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ 5 மற்றும் பூசா எர்லி.
மண் (Sand)
வடிகால் வசதியுள்ள இரும் பொறை மண் உகந்தது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 - 8.5 இருத்தல் வேண்டும்.
நிலம் (Land)
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்த வேண்டும். குற்று வகைகளுக்கு 60 x 30 செ.மீ அளவில் பார்கள் எடுக்க வேண்டும். பந்தல் வகைகளுக்கு 30 செ.மீ அளவில் நீளம் அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுத்து மேல் மண் மற்றும் தொழு உரம் இட்டு, ஒரு வாரம் ஆறப்போட வேண்டும்.
விதை (Seed)
-
குற்றுச்செடி வகைகளுக்கு:ஒரு எக்டருக்கு 25 கிலோ
-
பந்தல் வகைகளுக்கு: ஒரு எக்டருக்கு 5 கிலோ
விதை நேர்த்தி (Seed treatment)
ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை மூன்று பொட்டலம் ரைசோபியம் நுண்ணுயிர் உரத்துடன் சிறிது அளவு அரிசிக் கஞ்சி சேர்த்து நன்கு கலக்கி நிழலில் அரைமணி நேரம் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.
விதைத்தல் (Sowing)
-
குற்று வகைகளுக்கு ஒரு விதையை பார்களின் ஒரு புறமாக 2-3 செ.மீ ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும். பந்தல் வகைகளுக்கு ஒரு குழிக்கு 2-3 விதைகளை ஊன்ற வேண்டும்.
-
இடைவெளி 2 x 3 செ.மீ அளவில் கொடுக்க வேண்டும்.
-
கோ 1 இரக அவரைக்கு இடைவெளி போதுமானதாகும்.
நீர் பாய்ச்சுதல் (Water flow)
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு மூன்றாம் நாள் உயிர் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
பின்செய் நேர்த்தி (Pinch refinement)
கொடிகள் உருவாகியுடன், ஆறு அடி உயரத்தில் பந்தல் அமைத்து பந்தலில் கொடிகளை எடுத்துக் கட்டி படரவிட வேண்டும். தேவைப்படும் போது களைக்கொத்து கொண்டு களைகளை எடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை (Integrated Nutrition Management)
உரமிடுதல் (Fertilizers)
குற்று வகைகளுக்கு (அடியுரம்) எக்டருக்கு
|
தழைச்சத்து |
மணிச்சத்து |
சாம்பல் சத்து |
தொழு உரம் |
இறவை பயிருக்கு |
25 கிலோ |
50 கிலோ |
- |
12.5 டன் |
மானாவாரி பயிருக்கு |
12.5 கிலோ |
25 கிலோ |
- |
12.5 டன் |
பந்தல் வகைகளுக்கு: நிலம் தயாரிக்கும் போது எக்டருக்கு 20 டன் (குழி ஒன்றுக்கு 10 கிலோ) நன்கு மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின் போது இட்டு உழவேண்டும். அடியுரமாக குழி ஒன்றுக்கு 6:12:12 (தழை:மணி:சாம்பல்) கலப்பு உரம் 100 கிராம் இடவேண்டும். விதைக்கும் போது எக்டருக்கு 2 கிலோ அசோபைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் இடவேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து குழி ஒன்றுக்கு 10 கிராம் தழைச்சத்து இடவேண்டும்.
பயிர் |
|
இடவேண்டிய சத்துக்கள் (கிராம் குழி ஒன்றிற்கு) |
இப்கோ டிஏபி, யூரியா இடவேண்டிய அளவு (கிராம் குழி ஒன்றிற்கு) |
|||
|
|
தழை |
மணி |
சாம்பல் |
10:26:26 |
யூரியா |
பந்தல் அவரை வகைகளுக்கு |
விதைக்கும் போது குழி ஒன்றிற்கு |
6 |
12 |
12 |
60 |
0 |
|
30 நாட்களுக்குப் பின்னர் |
10 |
0 |
0 |
0 |
22 |
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு (Integrated crop protection)
சாறு உறிஞ்சும் அசுவினி முதலான பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு மில்லி மாலத்தியான் அல்லது டைமெத்தியோட் அல்லது மீதைல் டெமட்டான் இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய் (Gray disease)
இந்நோயைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.
அறுவடை (Harvesting)
பந்தல் வகை
எக்டருக்கு 240 நாட்களில் 12-13 டன்கள்
குற்றுவகை
எக்டருக்கு 120 நாட்களில் 8-10 டன்கள்.
காய்ப்புழு (Worm)
காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த கார்பைரல் 2 கிராம் / தண்ணீரில் கலந்து மூன்று முறை 15 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
அவரைக்காயின் பயன்கள் (Benefits of beans:)
-
அவரை பிஞ்சை வாரம் இருமுறை உணவில் சேர்ப்பதனால் உடல் ஆரோக்கியம் பெறும், பித்தம் குறையும்.
-
அவரை பிஞ்சில் துவர்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தை சுத்திகரிக்கும்.
-
ரத்த நாளங்களில் அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை குறைக்கும் தன்மை உடையது. எனவே இதனை ரத்த அழுத்தம், இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
-
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அவரைக்காய் உண்பதினால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.