மழை, வரத்துக் குறைவு உள்ளிட்டக் காரணங்களால், காய்கறிகளின் விலைக் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ஒரே ஒரு எலுமிச்சைப்பழம் ரூ.25,000த்திற்கு வாங்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் இந்த ஊர்மக்களின் நம்பிக்கை.
தீ மிதி திருவிழா
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகில் பழனிக்கவுண்டன் பாளையத்தில் ஸ்ரீ மஹா மாரியம்மன் பொங்கல், தீ மிதி திருவிழா நடைபெற்றது. பழனிக்கவுண்டன் பாளையம் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 18ம் தேதி செவ்வாய் கிழமை பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
20ம் தேதி வியாழக்கிழமை கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தினசரி காலையில் பெண்கள் கம்பத்துக்கு நீர் ஊற்றி வழிபட்டு வந்தனர்.
எலுமிச்சை ஏலம்
இதனையடுத்து அம்மனுக்கு தினசரி அபிசேகம், அர்ச்சனை, மஹா தீபாராதனை, திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றது.27-ம் தேதி வியாழக்கிழமை மதியம் பெண்கள் அனைவரும் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். 28-ம் தேதி வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு,மறு பூஜை நடைபெற்றது. இறுதியாக அம்மன் மடியில் வைக்கப்பட்டு இருந்த எலுமிச்சம் கனி ஏலம் விடப்பட்டது.
ஏலத்தில் பழனிக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்ற பக்தர் 25 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்து வீட்டுக்கு எடுத்து சென்றார். அம்மன் மடியில் எடுத்த எலுமிச்சை, தீமையில் இருந்து நம்மைக் காப்பதுடன், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
மேலும படிக்க...
அக்ரி கிளினிக் தொடங்க ரூ.1லட்சம் மானியம்- அருமையான வாய்ப்பு!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 24 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார் கார்த்திக்!