நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 May, 2019 3:53 PM IST

முன்னுரை

மண் மற்றும் தட்பவெப்பநிலை : அதிக சீதோஷ்ணத்துடன் கூடிய சமவெளிப் பகுதிகளில், நீர்ப்பாசன வசதிகளுடன் கூடிய செம்மண் கலந்து தோட்டக்கால் பகுதிகளில் மட்டுமே சாத்துக்குடி நன்கு வளர்ந்த பலன் கொடுக்கும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.

பருவம்: ஜீலை முதல் செப்டம்பர் வரை

பயிர்ப் பெருக்கம்: குருத்து ஒட்டு செய்த செடிகள்

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுதபின்பு 7 மீட்டர் இடைவெளியில் 75 செ.மீ நீளம், 75 செ.மீ அகலம், 75 செ.மீ ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்கவேண்டும். குழிகளில் தொழு உரம் 10 கிலோவுடன் மேல்மண் கலந்து மூடி ஒரு வராம் வைத்திருந்து குருத்து ஒட்ட  செய்த செடிகளைக் குழிகளின் மத்தியில் நடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்டவேண்டும். செடியின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துப் கொள்ளவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரங்களை கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுத்துள்ளவாறு இடவேண்டும்.

செடி ஒன்றுக்கு : கிலோவில்

           வருடம்

 தொழு உரம்

          ஒரு வருடம்

       10.0

   வருடா வருடம்            அதிகரிப்பு

       5.0

 6 வருடங்களுக்குப்         பிறகு

       30.0

 

    பயிர்

     வருடம்

இடவேண்டிய சத்துக்கள் (கிலோ / ஒரு மரத்திற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26 யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில் / ஒரு மரத்திற்கு)

சாத்துக்குடி

   ஒரு வருடம்

 தழை

    மணி

சாம்பல்

10:26:26

  யூரியா

  0.2

  0.10

  0.10

  0.40

  0.40

 

வருடா வருடம்      அதிகரிப்பு

  0.1

  0.3

   0.4

  0.15

  0.20

 

 6 வருடங்களுக்குப் பிறகு

  0.6

  0.20

  0.30

   1.20

  1.00

தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இரண்டாகப் பிரித்து மாாச் மாதத்திலும், அக்டோபர் மாதத்திலும் இடவேண்டும். தொழு உரம், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அக்டோபர் மாதத்தில் இடவேண்டும்.

நுண்ணூட்டச்சத்து இடுதல் : ஆரஞ்சு வகைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதையே  இதற்கும் கடைபிடிக்கவும்.

ஊடுபயிர்: அவரை வகை குடும்ப காய்கறிப் பயிர்களை பழங்கள் வரும் வரை ஊடுபயிராகப் பயிர் செய்யலாம். உரம் மற்றும் எரு வினை வட்டப்பாதத்தி முறை மூலம் தண்டுப் பகுதியிலிருந்து தூரத்தில் இடவேண்டும். மேலும் துத்தநாக சல்பேட் (0.5 %) மேங்கன்சு (0.05 %), இரும்பு (0.05 %), மெக்னீசியம் (0.5 %), போரான் (0.1 %) மற்றும் மாலிப்படினம் (0.003 %) போன்ற நுண்ணூட்ட கலவையினை 3 மாதத்திற்கொருமுறை இடவேண்டும். இதனுடன் 50 கிராம் துத்தநாக சல்பேட், மாங்கனீசு இடவேண்டும். இதனுடன் 50 கிராம் துத்தநாக சல்பேட், மாங்கனீசு மற்றும் இரும்பு சத்துக்களை வருடம் ஒரு முறை மண்ணில் இடவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

காய்ந்த தண்டுகள், இறந்த மற்றும் நீர்த்தண்டு களையும் அவ்வப்போது நீக்கிவிடவேண்டும். பக்கக் கிளைகளையும் அவ்வப்போது நீக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

நூற்புழு : நூற்புழுக்களின் தாக்குதல் இருந்தால் மரம் ஒன்றுக்கு சூடோமோனஸ் புளூரசன்ஸ் 20 கிராமை 15 செ.மீ ஆழத்தில் மரத்திலிருந்து 50 செ.மீ தள்ளி இடவேண்டும்.

இலைச்சுருட்டுப் புழு : இதனைக் கட்டுப்படுத்த டைகுளோர்வாஸ் 1 மில்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது டைமித்தோயேட் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது பென்தியான் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்த தெளிக்கவேண்டும். வேப்பங்கொட்டைச்சாறு 6 சததம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதம் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

சிற்றிலை நோய் : இதனைக் கட்டுப்படுத்த, ஒரு சத சிங்க் சல்பேட் கரைசலுடன், ஒரு மில்லி டீப்பாலுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கரைசலுடன் சேர்த்து கீழ்க்கண்ட தருணங்களில் தெளிக்கவேண்டும்.

புதிய தளிர்கள் விடும்போது, 2. ஒரு மாதத்திற்குப் பிறகு, 3. பூக்கும் மற்றும் காய்ப்பிடிக்கும் தருணத்தில்.

அறுவடை

நட்ட 5 அல்லது 6 ஆண்டுகளில் அறுவடைக்கு வரும். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் நல்லபலன் கொடுக்கும்.

மகசூல் : ஒரு எக்டருக்கு 30 டன் பழங்கள்.

English Summary: mandarin orange cultivation: fruit crop :horticulture
Published on: 14 May 2019, 12:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now