மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 May, 2019 4:28 PM IST

இரகங்கள்

நீலம், பெங்களூரா, நடுச்சாலை, சப்பட்டை, செந்துராம், ஹிமாயூதின், காலேபாடு, மோனி, மல்கோவா, பையூர் 1, அல்போன்சா, சிந்து.

வீரிய ஒட்டு இரகங்கள்:

பெரியகுளம் 1, பெரியகுளம் 2, தர்னா, மல்லிகா, அம்பராபாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து, சேலம் பெங்களூர்.

மண்ணும் தட்பவெப்ப நிலையும்:

நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும். மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 8 வரை.

பருவம்: ஜீலை முதல் டிசம்பர் வரை

பயிர் பெருக்கம் : ஒட்டுக் கட்டிய செடிகள்

நிலம் தயாரித்தல்:

நிலத்தை 3 முதல்  4 முறை நன்கு உழவேண்டும். பின்பு 1 மீட்டர் நீளம் 1 மீட்டர் அகலம் 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாட்களுக்குள் முன்னர் வெட்டவேண்டும். பின்னர் குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரம் மற்றும் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூடவேண்டும்.

விதையும் விதைப்பும்

செடிகள் நடுதல்: ஒட்டுக்களை குழிகளின் மத்தியில் நடவேண்டும்.

இடைவெளி: செடிக்குச் செடி 6 முதல் 10 மீட்டர் வரை அடர் நடவு முறையினை (10x5 மீ) அல்போன்சு, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற இரகங்களில் பின்பற்றலாம்.

நீர்ப்பாசனம்: செடிகள் நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல்: (கிலோ ஒரு மரத்திற்கு)

         உரம்

 முதலாம் ஆண்டு

வருடா வருடம் அதிகரிப்பு

6 வருடங்களுக்குப் பிறகு

      தொழு உரம்

         10.00

                10.00  

           50.00

 

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ ஒரு மரத்திற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்திற்கு)

 

 

தழை     

மணி

சாம்பல்

10:26:26               

யூரியா

பொட்டாஷ்

 

முதலாம் ஆண்டு

0.2

0.2

0.3

1.2

0.2

 0

 

வருடா வருடம் அதிகரிப்பு

0.2

0.2

0.3

1.2

0.2

0

 

6 வருடங்களுக்குப் பிறகு

1

1

1.5

4.0

1.3

0.840

மேற்படி உரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். உரங்களை நன்கு கலந்த பின் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப்பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு, பின்  அவற்றை மூடி நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

கவாத்து செய்தல்

மா மரத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கவாத்து  செய்யப்படவேண்டும். மரத்தில், தாழ்ந்து இருக்கும் கிளைகள், குறுக்கும், நெடுக்குமாக ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள், நோய் தாக்கிய மற்றும் மெல்லிய, பட்ட அல்லது காய்ந்த கிளைகள் ஆகியவற்றை நீக்கவேண்டும். இதன் மூலம்  சூரிய வெளிச்சம்  மற்றும் காற்று உள்ளே உள்ள கிளைகளுக்குக் கிடைத்து, மரம் நன்றாக வளர்ந்து பூ பூத்து காய்ப்பிடிக்க ஏதுவாகிறது. மா மரத்தில் மூன்று வருடங்கள் வரை பூ பூப்பதை தவிர்க்கவேண்டாம். வருடத்திற்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும்  விடவேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்

என்.ஏ.ஏ என்ற வளர்ச்சி ஊக்கி மருந்தை 20 பி.பி.எம் என்ற அளவில்  இணர:டு முறை தெளிக்கவேண்டும். இவ்வாறு தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்கும்.

பிப்ரவரி மாதத்தில், பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சத யூரியா கரைசல் ( 5 கிராம் லிட்டர் ஒன்றுக்கு) அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் ( 10 கிராம் லிட்டர் ஒன்றுக்கு) கரைசல் தெளிக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

பயிர்ப்பாதுகாப்பு

தத்துப்பூச்சி: பூச்சிகள், பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் பிஞ்சுகள் பிடிக்காமல் உதிர்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு பாசலோன் 35 இசி 1.5 மிலி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து  கிளைகள், தண்டுகள் , மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தெளிக்கவேண்டும் அல்லது கார்பரில் 50 சதம் நனையும் தூள்

கிராமுடன் 2 கிராம்  நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும்.

தெளிக்கும் காலம்: மரம் பூ பூக்க ஆரம்பிக்கும் காலத்திலிருந்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிக்கவேண்டும்.

அறுவடை

அறுவடைக் காலம்: மார்ச் முதல் ஜீன் வரை அறுவடை செய்யலாம். இரகத்திற்கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் மகசூல் மாறுபடும்.

முதல் பதினைந்து  ஆண்டுகள்

எக்டருக்கு 8 முதல் 10 டன்கள்

15-20 வருடங்களுக்கு

எக்டருக்கு 15 முதல் 20 டன்கள்

அறுவடையின் நேர்த்தி

அறுவடை செய்த உடன் பழங்களை 52±1 செல்சியஸ் வெப்பமுள்ள சுடுநீரில் 5 நிமிடம் நனைத்து எடுக்கவேண்டும். பின்பு 8 சதவீதம் தாவர மெழுகில் (வேக்சால் (அ) ஃபுரூட்டாஸ்) நனைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பழங்களில் ஆந்தரகனோஸ் நோய் தாக்கதவாறு பாதுகாக்கலாம். மேலும் அறுவடைக்கு முன்னர் 0.20 சதவிகிதம் மாங்கோசிப் (2.0 கி / லிட்டர்) மருந்தினை தெளித்து  நோய் தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.

English Summary: mango cultivation: organic way of cultivating method
Published on: 08 May 2019, 04:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now