Horticulture

Friday, 18 September 2020 07:13 AM , by: Elavarse Sivakumar

விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50,000 சாமந்தி பூ (Marigold) நாற்றுகள் உற்பத்தி செய்து, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், வி.ஆர்.ஐ., 3 வீரிய ரக முந்திரி, லக்னோ- 49 ரக கொய்யா, பாலூர் -1, பாலூர்- 2 ரக பலா, ரெட் லேடி ரக பப்பாளி, உயர் ரக மா, சப்போட்டா உள்ளிட்ட பழ வகைகள், கத்திரி, மிளகாய், சாமந்தி உள்ளிட்ட பூ வகை செடிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவை, தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் மூலம் மானிய விலையிலும், நேரடி விலையிலும் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில், 1 லட்சம் மிளகாய் மற்றும் 2 லட்சம் கத்திரி கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக பண்ணை வளாகத்தில் உள்ள பசுமை குடிலில் குழித்தட்டு முறையில் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவை, நன்கு வளர்ச்சியடைந்ததும், விற்பனை செய்யப்பட உள்ளன. அதில், மிளகாய், கத்திரி கன்றுகள் நேரடி விலையில் ரூ.1க்கும், தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ஹெக்டருக்கு 20,000 கன்றுகள் வீதம் விவசாயிகளுக்கு மானியமாகவும் வழங்கப்பட உள்ளன.

மேலும், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே 50,000 சாமந்தி பூ நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இவை நன்கு வளர்ச்சியடைந்து, தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

நாற்றுகள் (Sapling)

இதன் மூலம் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைக்கு சாமந்தி பூக்களை அறுவடை செய்து விவசாயிகள் பயன்பெற முடியும். ஒரு நாற்று நேரடி விலையில் ரூ.4க்கும், ஹெக்டேருக்கு 4,000 கன்றுகள் வீதம் மானியமாகவும் வழங்கப்பட உள்ளன.

மானிய விலை (Subsidy Rate)

லக்னோ 49 ரக கொய்யா கன்றுகள் அடர் நடவு முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, அடுத்த வாரத்தில் விற்பனைக்கு வந்து விடும். ஒரு செடி ரூ.30க்கும், மானிய விலையில் ஹெக்டருக்கு 586 கன்றுகளும் வழங்கப்படும். மானிய விலையில் பெற விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.


தகவல்
மேலாளர்
அரசு தோட்டக்கலைப் பண்ணை
விருத்தாசலம்

மேலும் படிக்க...

உருளைக்கிழங்கை உங்கள் வீட்டு மாடியிலும் வளர்க்கலாம் - சாகுபடிக்கான யுக்திகள்!

அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் தடை- மத்திய அரசு அதிரடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)