Horticulture

Monday, 15 October 2018 01:44 PM

பொருளாதார பகுதி - முழுமையான தாவரம்

பயன்கள்- ஹெபடிடிஸ் பி மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களை

குணப்படுத்துகிறது.

பிரதான மூலக்கூறு - பைலான்தின் (0.4-0.5%) மற்றும் ஹைப்போபைலான்தின்.

இரகங்கள்:
 நவ்யாகிரிட் - என்ற ரகமானது சாகுபடி செய்யப்படுகிறது. இது உயர் புல் வகையை சார்ந்தது.   

 மண் மற்றும் காலநிலை

வடிகால் தன்மை கொண்ட  மணல் கலந்த பசலை அல்லது களிமண் ஏற்றது. வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதியில் மானாவாரி பயிராக நன்கு வளரும். கார அமிலத் தன்மை- 7.5-6.5.

விதைப்பு
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது மேல் மண்ணை சமன்படுத்த வேண்டும். ஒரு எக்டருக்கு நாற்றுகளை தயாரிக்க 1 கிலோ விதை தேவைப்படும். விதைகள் ஒரு வாரத்தில் தளிர் விடும். அவற்றை 20 நாட்கள் வரை பராமரிக்க வேண்டும். முளைப்புத் திறனை அதிகரிக்க விதைப்பதற்கு முன் நல்ல தண்ணீரில் விதைகளை 20-30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

நடவு மற்றும் இடைவெளி

3 முதல் நான்கு வாரம் வயதுடைய நாற்றுகளை 10 x 15 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். எக்டருக்கு 8 லட்சம் நாற்றுகள் தேவைப்படும்.

உரமிடுதல்: 
தாவர வளர்ச்சியை ஊக்குவிக்க தொழு உரம் 10-20 டன், 50 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து எக்டருக்கு அளிக்க வேண்டும். தழை மற்றும் சாம்பல் சத்து முழு அளவும் மணிச்சத்து பாதி அளவும் அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள மணிச்சத்து இரு பகுதிகளாக பிரித்து பாதி அளவு நடவு செய்த 30வது நாளிலும், மீதமுள்ள அளவை நடவு செய்த 60வது நாளிலும் அளிக்க வேண்டும். 

பயிர் பாதுகாப்பு:

பொதுவாக இந்த மூலிகைக்கு பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முயற்சிகள் அதிகம் தேவையில்லை.

அறுவடை
பயிர் ஜூன் முதல் ஜூலை பயிரிடப்படப்பட்டால், செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் சாகுபடிக்கு தயாராகும். செப்டம்பர் அறுவடையானது உயர் பில்லாந்தின் உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது. நடவிலிருந்து, 80 முதல் 100 நாட்களில் தாவரங்கள் அதிகபட்சமாக வளருகின்றன.
மகசூல்
எக்டருக்கு சராசரி மகசூல் புதிய மூலிகை 17.5 டன் மற்றும் உலர் மூலிகை (உலர்ந்த தாவர பொருள்) எக்டருக்கு 1750 கிகி.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)