Horticulture

Sunday, 29 August 2021 08:57 AM , by: Elavarse Sivakumar

தமிழகத்திலேயே முதல் முறையாக ஆதிதிராவிட, பழங்குடி விவசாயிகளுக்கு 100% மானியத்தில்‌ மின் மோட்டாருடன்‌ நுண்ணீர்ப்‌ பாசன வசதி அமைத்துத்‌ தரப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர் (Budget Session)

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

SC / ST பிரிவு விவசாயிகள் (SC / ST  farmers)

ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில்‌ ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள்‌ அமைத்து மின் மோட்டாருடன்‌ நுண்ணீர்ப்‌ பாசன வசதி அமைத்துத்‌ தருவதற்காக ரூ.12 கோடி செலவிடப்படும்‌.

8 மாவட்டங்கள் (8 districts)

அரியலூர்‌, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்‌, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில்‌ இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

200 ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளின்‌ நலனுக்காக, தமிழக வரலாற்றில்‌ முதன்‌முறையாக 2021-2022ஆம்‌ ஆண்டில்‌ நிலத்தடி நீர்‌ பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள்‌ அமைத்து, மின் வசதியுடன்‌, மின்மோட்டார்‌ பொருத்தி, நுண்ணீர்ப் பாசன வசதிகள்‌ 100 சதவீத மானியத்தில்‌ மேற்கொள்ளப்படும்‌. இதற்காக 12 கோடி ரூபாய்‌ நிதி செலவிடப்படும்‌.

சேமிப்புக் கிடங்குகள்‌ (Warehouses‌)

அறுவடைக்குப் பின்‌ சேதமில்லாமல்‌ வேளாண்‌ விளைபொருட்களைச் சேமித்து, நல்ல விலை கிடைக்கும்‌போது சந்தைப்படுத்துவதில்‌ கிடங்குகள்‌ மிகவும்‌ முக்கியப் பங்காற்றுகின்றன.

250 மெட்ரிக்‌ டன்‌ (250 metric tons)

எனவே, 2021- 2022ஆம்‌ ஆண்டில்‌, திருப்பூர்‌, புதுக்கோட்டை, நாமக்கல்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு உதவும்‌ வகையில்‌, திருப்பூர்‌ மாவட்டம்‌ பூளவாடி, புதுக்கோட்டை மாவட்டம்‌ சிதம்பர விடுதி, நாமக்கல்‌ மாவட்டம்‌ எருமப்பட்டி, ஈரோடு மாவட்டம்‌ பர்கூர்‌ ஆகிய இடங்களில்‌ தலா 250 மெட்ரிக்‌ டன்‌ கொள்ளளவு உள்ள சேமிப்புக் கிடங்குகள்‌ ரூ.2 கோடி செலவில்‌ கட்டப்படும்‌‌.

இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

Kisan Tractor Subsidy Scheme: டிராக்டர் வாங்க மாநில அரசு தள்ளுபடி வழங்கல்- விவசாயிகளே புத்திசாலிதனமாக திட்டதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)