முருங்கை மரம்
நம்மூரில் பெரும்பாலான இல்லங்களில் வளர கூடிய மரம் என்றே கூறலாம். நம்மாழ்வார் குறிப்பிட்ட 10 மரங்களில் இதுவும் ஒன்று, இதெற்கென்று எந்த தனி கவனிப்பும் தேவையில்லை, எல்லா தடப்வெப்ப நிலையிலும் வளர கூடியது. இதன், இலை, காய், பூ என எல்லாம் மருத்துவ குணம் பெற்றவை... கண்டுபிடித்து விட்டிர்களா? பரவாயில்லை நானே சொல்கிறேன், நம்ம முருங்கை மரம் தான் அது..
இயற்கை நமக்களித்த கொடைகளை நம் அறியாமையினால் பல சமயங்களில் அறிந்து கொள்ள தவறுகிறோம். இன்று உலகம் முழுவதும் இதற்கான சந்தை மற்றும் இதற்கான தேவை அதிகரித்துள்ளது எனலாம். அரை நூற்றாண்டு முன்பு வரை நாம் முருங்கை மரத்தின் இலைகள், காய்கள்,பூக்கள் இவற்றை சமைத்து உண்போம். வாடி போனால் கால்நடைகளுக்கோ அல்லது குப்பைகளிலோ போடுவோம்.
நாம் அன்றாடம் முருங்கை கீரையை உணவில் சேர்த்து கொண்டால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கவும், வரும் முன் காக்கவும் சிறந்த மருந்தாகும்.ஆயுர் வேத மருத்துவத்தில் இந்த இலையை பற்றி குறிப்பிட்டுள்ளனர். இதில் 300 வகையான நோய்களை வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களுக்கு மருந்தாகவும் பயன் படுகிறது. மேலும் இதில் 90 வகையான சத்துக்களும், 46 வகையான மருத்துவ குணங்கள் இருப்பதாக கண்டறிய பட்டுள்ளது.
முருங்கை கீரை உண்பதால் உடல் சூடு குறையும். முக்கியமாக ரத்த சோகை நிக்கும், இதிலுள்ள இரும்பு சத்து உடலுக்கு சக்தி தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருவதோடு, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை சமன் செய்கிறது. குறிப்பாக இளம் பெண்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, குழந்தைகள் பெற்ற பின் என எல்லா நிலையிலும் முருங்கை கீரை, பூக்கள், காய்கள் சாப்பிட ஏற்றது. பிரசவத்தின் போது இழந்த அனைத்து சத்துக்களை இது மீட்டு தருகிறது. இதன் பூக்கள் தாய் பால் சுரப்பதற்கு பெரிதும் உதவுகிறது.
தென் மாநிலங்களில் பெரும் அளவில் காண படுகிறது. அது மட்டுமல்லாது இலங்கையிலும் இக்கீரையினை பயன்படுத்துகிறார்கள். இன்று உலகம் முழுவதும் இதனை பல்வேறு வடிவங்களில் உபயோகிக்க படுகிறது.
முருங்கையிலை விவசாயம்
இதில் தொழில் முனைய விரும்புவோர் முதலீடாக 40,000 முதல் 50,000 வரை செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் முருங்கை மரங்களை வளர்த்தல் 3 ஆண்டுகளில் சுமார் 6 டன் முருங்கை கீரையை அறுவடை செய்யலாம். மாதத்திற்கு 2 முறை அறுவடை செய்வதன் மூலம் அரை டன் கீரை எடுக்கலாம். இதனை உலர்த்தி பவுடர் செய்தல் 200 கிலோ உலர்ந்த பவுடர் கிடைக்கும். ஒரு கிலோ பவுடர் ரூ 400 வரை விற்பனை செய்ய படுகிறது. மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது மேலும் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
முருங்கையின் மதிப்பு கூட்ட பட்ட பொருட்கள்
- முருங்கை இலை மாத்திரைகள்
- முருங்கை டீ
- முருங்கை பவுடர்
- முருங்கை எண்ணெய்
- முருங்கை விதை
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில் இதனை பயன்படுத்துவதன் மூலம் மேலும் அதிக லாபம் பெறலாம். இந்த பவுடரை பயன் படுத்தி மசாலா மிக்ஸ், அட்டா மிக்ஸ், குளிர் பானம் மிக்ஸ், குக்கீஸ் என 21 பொருட்களை தயாரிக்கலாம் என பரிந்துரைத்துள்ளனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran