லாவண்டர் என்ற வாசனை செடி கொசுக்களை விரட்டும் அற்புதச் செடி.
இதற்கு, அதிக தண்ணீர் தேவையில்லை. கவனிப்பும் அதிகம் தேவையில்லை என்பதால், வீட்டில் எளிதாக வளர்க்கலாம்.
விரட்டும் செடிகள்
குளிரும், மழையும் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டாலே, இந்தக் கொசுக்களின் தொல்லை அதிகரித்துவிடும். இதற்கு, கொசுவிரட்டிகளைப் பயன்படுத்துவது நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. அதனால்தான், மக்களின் உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு, கொசுவிரட்டி மருந்துகளை அயல்நாடுகள் தடை செய்திருக்கின்றன. குறிப்பாக அயல் நாடுகளில் தடை செய்யப்பட்ட கொசுவிரட்டில் இந்தியாவில் இன்னும் பயன்பாட்டில்தான் இருக்கின்றன.
ஆக அத்தகையக் கொசுவிரட்டிகளைத் தவிர்க்கவும் வேண்டும், கொசுக்களை விரட்டவும் வேண்டும் என்றால் அதற்கு, நறுமணம் பரப்பும் சில செடிகள் உங்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். அதனால்தான் இவை கொசுவிரட்டித் செடிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அதிலும், சாமந்திப்பூ, செடியில் இருந்துவரும் தனித்தன்மை கொண்ட வாசனையை பூச்சிகளும், உயிரினங்களும் விரும்புவதில்லை.
இச்செடிகளை கடந்து வீட்டுக்குள் செல்ல கொசுக்கள் தயங்குகின்றன.
இச்செடியை நிழலில் வைத்தால் வளர்ச்சி தாமதமடையும் என்பதால், வெயிலில் வளர்ப்பது நல்லது. அசுவினி உள்ளிட்ட பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது என்பதால், விவசாயத் தோட்டத்திலும் இதை வளர்க்கலாம்.
‘சிட்ரோநெல்லா புல்’ என்ற செடியின் இலைகளை கசக்கினால் எலுமிச்சை மணம் தூக்கலாக வீசும். இது, இந்த புல்லின் தனிச்சிறப்பு.
இதில் இருந்து எடுக்கப்படும் ‘சிட்ரோ நெல்லா’ எண்ணெய் வாசனை பொருளாகவும், மூலிகைத் திரவமாகவும் பயன்படுகிறது. இந்த எண்ணெயை மெழுகுவர்த்தி, விளக்குகளில் ஊற்றி எரித்தோ, சருமத்தில் தேய்த்துக்கொண்டோ கொசுக்களில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
ஒரு வகை புதினா செடியின் (ஹார்ஸ் மின்ட்) மணம் சிட்ரோநெல்லா புல்லைப் போலவே இருக்கும். வெப்பமான இடங்களிலும், மணற்பாங்கான பகுதியிலும்கூட நன்றாக வளரும். பல்லாண்டு தாவரம் என்பதால், ஒரு முறை நட்டுவிட்டால் நான்கைந்து ஆண்டுகளுக்கு இது கொசுவிரட்டியாக செயல்படும்.
ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் மட்டுமின்றி மற்ற பூச்சிகளும் வீட்டை அண்டாது. இச்செடி அதிக குளிரைத் தாங்காது என்பதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் வீட்டுக்குள் வைத்து வளர்க்கலாம். இவற்றைத் தவிர நமக்கு நன்கு அறிமுகமான வேம்பு, துளசி, கிராம்புச்செடி போன்றவற்றையும் வீட்டில் வளர்த்து கொசுக்களை விரட்டலாம்.
மேலும் படிக்க...