காளான்கள் சாகுபடி மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இதற்கு காளானைத் தாக்கும் பூச்சிகளில் ஒன்றான ஈக்களைக் கட்டுப்படுத்துவது மிக மிக முக்கியம்.
காளான் வளர்ப்பு (Mushroom cultivation)
காளான் வளர்ப்பின்போது, களைப் பூசணங்கள், பூச்சிகள், நோய்கள் மற்றும் இயற்கைச் சூழல் மாறுபாடுகளால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றும்.
காளான் என்பது பூசண வகையைச் சார்ந்த நுண்ணுயிர். எனவே இயற்கையில் தோன்றும் பல்வேறு பூச்சிகள் காளான் பூசணத்துடன் போட்டியிட்டு வித்துப்பை அல்லது படுக்கைகளில் தோன்றி அவற்றைச் சேதப்படுத்தலாம்.இதன் காரணமாகவே காளான் பண்ணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
காளான் ஈ தாக்குதலின் அறிகுறிகள் (Symptoms of a mushroom fly attack)
-
போரிட் மற்றும் சியாரிட் இன ஈக்களும் அவற்றின் புழுக்களும் காளான் படுக்கைகளைத் தாக்கிச் சேதப்படுத்தும், வளரும்.
-
இதனால் படுக்கைகளின் ஈரம் கோர்த்த திட்டு திட்டான வளர்ச்சி காணப்படும். இப்பகுதிகள் அழுகித் துர்நாற்றமடிக்கும்.
-
சிலவேளைகளில் களைப்பூசணங்கள் காளான் ஈ மூலம் எல்லாப் படுக்கைகளுக்கும் பரவும், படுக்கைகளில் பாக்டீரியா, டிரைக்கோடோமோ, பெனிசிலியம் ரைசோபஸ் வகை நுண்ணுயிரிகள் பெருகிக் காளான் விளைச்சல் குறையும்.
பூச்சியின் விபரம்
காளான் குடிலுக்கு வெளியே தேங்கிய குப்பைக்கூளங்களில் இந்த ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும்.
படுக்கையில் இடப்படும் துளைகள் வழியே ஈக்கள் உட்புகுந்து ஒவ்வொன்றும் 30 - 40 முட்டைகளை இடும்.
இவற்றிலிருந்து 4 5 மி.மீ நீளமுள்ள வெண்மை நிறப்புழுக்கள் தோன்றும்.
பராமரிப்பு (Maintenance)
-
காளான் குடிலில் உள்ள எல்லா அறைகளிலும் ஜன்னல் மற்றும் கதவுகளை 30 காஜ் அளவுள்ள கம்பி அல்லது நைலான் வலைகள் பொருத்த வேண்டும்.
-
பெரியளவில் காளான் உற்பத்தி செய்ய ஆரம்ப நிலையிலேயே முறையானக் குடில் அமைப்புகளை உருவாக்கினால் பெரிய இழப்பைத் தடுக்கலாம்.
-
எண்ணெய் அல்லது கிரீஸ் தடவிய பாலித்தீன் பைகளை அறைகளில் ஆங்காங்கே கட்டித் தொங்க விடலாம்.
-
விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி ஆகியவற்றை உபயோகித்தும் தாய்ப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
-
குடிலின் கூரை சுவர் மற்றும் சுற்றுப் புறங்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 6 மி.லி 10 மி.லி மாலதியான் மருந்து கலந்து தெளிக்கலாம்.
-
ஆனால் காளான் மொட்டுகளில் இம்மருந்துகளை படுக்கையில் இடும் துளைகளில் 2 சதவீத வேப்பெண்ணெய் தடவுதல் அல்லது படுக்கை தயாரிக்கும் போது தேவையான வைக்கோலுடன் சுமார் 200 கிராம் வேப்பம்புண்ணாக்கு தூள் கலத்தல் ஆகியன நல்ல பலனைத் தரும்.
இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், காளான் ஈக்களைக் கட்டுப்படுத்த முடியும் என சேலம் மாவட்டம், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய செ.சுகன்யா கண்ணா, ஆர்.ஜெகதாம்பாள் மற்றும் ம.மலர்கொடி ஆகியோர் அறிவுரை கூறியுள்ளனர்.
மேலும் படிக்க...
TNAUவில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை- வரும் 8ம் தேதி தொடக்கம்!