இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 April, 2021 8:56 AM IST
Credit : Canada Tamil

விருந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது வாழை இலை. அதிலும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு வாழை இலையில் அசைவ உணவுப் பரிமாறுவது என்பது தமிழர்களின் பண்பாடு.

இதற்காகவே தென் மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளில், வாழை மரங்களை இலைக்காகவே வளர்ப்பார்கள். இதேபோல், தென்னை மரங்களைப் பேணிப் பாதுகாத்து, அதன் இளநீரை, விருந்தாளிகளுக்கு வழங்குவதைத் தனி கவுரவமாகவேப் பார்க்கிறார்கள்.

வாழை இலை சாகுபடி (Cultivation of banana leaf)

வாழை பொறுத்தவரை காய்கள் மற்றும் பழங்கள் மட்டும் வருமானத்தைக் கொடுப்பதில்லை சரியாக திட்ட மிட்டால் இலையும் நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.

இலைக்காகப் பயிரிட படும் ரகங்கள் என்று பார்த்தால் பூவன் சிறந்தது. அதற்கு அடுத்தபடியாகக் கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் வாழை ரகங்களையும் இலைக்காகப் பயிர்செய்யலாம்.

கவனிக்க வேண்டியவை (Things to look out for)

வாழை இலைக்காகப் பயிர் செய்யும் போது மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

காற்று (Air)

இலையையோ அல்லது மரத்தையோ சுலபமாகச் சாய்க்கக் கூடியது. முடிந்த அளவு அதிகக் காற்று அடிக்கும் பகுதிகளைத் தவிர்த்து விடுவது சாலச் சிறந்தது. காற்றுத் தடுப்பாக வரப்பு ஓரங்களில் உள்வரிசையில் அகத்தி , கிளரிசிடியா போன்ற மரங்களையும் வெளி வரிசையில் சவுக்கு மற்றும் யூக்கலிப்டஸ் மரங்களை நடலாம்.

இடைவெளி (Gap)

இலைகள் நன்றாக விரிவடைந்து வளர சூரிய ஒளி முக்கியம். எனவே வாழையை நெருக்கமாக நடாமல் தேவையான இடைவெளி விட்டு நடலாம்.

இயற்கை மருந்துகள் (Natural Medicines)

இலைக்காகத்தான் நாம் வாழை பயிர் செய்கிறோம் என்றால், தழை சத்துதான் மிக முக்கியம். அதேபோல் இலை நன்றாகப் பிடித்து வளர வேண்டுமென்றால் கால்சியம் சத்து வேண்டும். மேலும் இலை கிழியாமல் இருக்க , வழுவழுப்பாக இருக்க சில நுண்ணூட்ட சத்துகள் தேவை. பொதுவாக 80:10:10 என்ற விகிதத்தில் தழை ,மணி ,சாம்பல் சத்தும் கொடுக்க வேண்டும். இந்தமாதிரி அமைப்பு இருந்தாலே இலைப்பெருக்கம் நன்றாக இருக்கும்.

தழைச்சத்து (Nutrient)

தழைச்சத்துக்கு உரிய இயற்கை உரங்கள் சாணம், ஊட்டம் ஏற்றிய தொழு உரம், மீன் அமிலம், பஞ்சகாவிய தரைவழியும் ஈ.எம் கரைசல், பஞ்சகாவியவை தெளித்தும் கொடுக்கலாம்.

சாம்பல் சத்து (Ash nutrient)

சாம்பல் தேவையான இடைவெளியில் வைத்துக்கொள்ளலாம். ஒரு மரத்திற்கு இரண்டு கை அள்ளுகிற அளவு வைக்கவேண்டும் அல்லது பொட்டாஷ் பாக்டீரியா 10 மில்லி கிராம் கொடுக்கலாம்.

மணிச்சத்து

  • கடலைப் புண்ணாக்குக் கரைசல் கொடுக்கலாம் அல்லது மாட்டுக் கோமியம் கொடுக்கலாம் அல்லது மண்புழு உரம் கொடுக்கலாம்.

  • இதைத் தவிர்த்து இலைகள் காயம்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பூச்சிகள், புழுக்கள் மற்றும் நோய்களிடம் இருந்து காப்பாற்றவேண்டும்.

  • இதைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம், வேலமரப் பட்டைக்கரைசல் ஆகியவற்றை அவ்வப்போது, தயார் செய்து கொடுத்துக்கொண்டு இருந்தாலே கட்டுப்படுத்தி விடலாம்.

மேலும் படிக்க...

மரம் நடுமாறு மன்றாடியவர் மரணம்- நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்!!

PMKMY-விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியத் திட்டம் - உங்கள் பெயரைப் பதிவு செய்வது எப்படி?

அனுபவ வயதில் இளமைக்கு வித்திடும் ''அடல் ஓய்வூதிய திட்டம்''!

English Summary: Natural Banana Cultivation - What Fertilizers Are Needed?
Published on: 17 April 2021, 08:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now