சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 24 April, 2021 11:46 AM IST
Pambatti Heritage Seed Storage, which provides native varieties of seeds free of cost
Credit : CCOF

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் இயங்கும் பாம்பாட்டி மரபு விரை சேமிப்பகம், நாட்டு ரக விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

நாட்டு விதைகள் (Country seeds)

காரியாப்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சரவணகுமார். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக 92க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டுக் காய்கறி மற்றும் சிறுதானிய வகை விதைகளைத் தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி பரவலாக்கம் செய்து வருகிறார்.

நெல் விளையும் பூமியாகத் தமிழகம் திகழ்கிறது. ஆனால் கால ஓட்டம், உற்பத்திப் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டு குறுகிய காலம் பயனளிக்கும் விதைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சத்து குறைகிறது (Nutrition decreases)

இதனால் நெல் மற்றும் காய்கறிகளில் சத்து குறைவதுடன் அதனை உண்ணும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண நினைத்த விவசாயி சரவணகுமார் பாரம்பரிய விதைகளை மீட்டு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக பல இடங்களுக்கு சென்று நாட்டு விதைகளைச் சேகரித்து அவற்றைப் பயிரிட்டு உற்பத்தி செய்கிறார்.

அவ்விதைகளை மண்பாண்டங்கள் மற்றும் சுரைக் குடுவைகளில் சேகரித்து மக்களுக்கு இலவசமாகவும், விலை கொடுத்து வாங்கும் திறன் கொண்ட விவசாயிகளுக்கு குறைந்த விலையிலும் வழங்கி வருகிறார். பூசணி, சுரைக்காய், பயிறு வகைகள் என 90க்கும் மேற்பட்ட விதைகளை சேகரித்து வருகிறார்.

டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள சரவணகுமார், 11 வருடம் தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராகப் பணியாற்றினார். பிறகு, இயற்கை விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வத்தினால் விவசாயத்தை முழுநேரவேலையாகச் செய்ய ஆரம்பித்தார்.

நாட்டு விதைகளின் கருவூலம் (Treasury of country seeds)

இது குறித்து சரவணகுமார் அவர் கூறியதாவது, நாற்பது ஐம்பது வருடத்திற்கு முன் நாட்டுவிதைளின் கருவூலமாக கிராமங்கள் தான் இருந்தன. ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றத்தால் விதைகள் பரவலாக்கமாயிற்று. பசுமைப்புரட்சியின் தாக்கம் உற்பத்திப் பெருக்கத்தால் விவசாயிகள் மத்தியில் நாட்டு விதைகள் பயன்பாடு குறைந்து போயிற்று.

பச்சை நீள வெண்டை (Green Ladies finger)

ஆதலால் நாட்டுரக விதைகளைச் சேகரித்து பரவலாக்கம் செய்ய முடிவெடுத்த நான், முதலில் பச்சை நீள வெண்டை ரகச் சேகரிப்பைத் துவங்கினேன். ஒரு விவசாயியின் மூலம் அடுத்த விவசாயியோட தொடர்பு கிடைத்தது. அவர்களுடைய சேமிப்பில் இருந்த விதைகளை வாங்கிச் சேகரித்தேன்.

78 ரக விதைகள் (Seeds of 78 varieties)

பல கிளை வெண்டை பச்சை வெண்டை, பச்சைக் குட்டைவெண்டை, பச்சை நீளம். சிவப்பு பல கிளை, வெள்ளை பல கிளை, சிவப்பு கஸ்தூரி வெண்டை காபி வெண்டை, மலை வெண்டை, மாட்டுக்கொம்பு வெண்டை ஆனைத் தந்த வெண்டை என பதினான்கு வகை வெண்டை விதைகளை சேகரித்துள்ளேன். தொடர்ந்து கத்தரி, தக்காளி, அவரை, பீர்க்கங்காய், பாகல், பூசணி, சுரை, மொச்சை, முருங்கை என்று, காய்கறிகள், கீரைகள், சிறுதானியத்தில் பாரம்பரிய சோளரகங்கள் என மொத்தம் 78 ரக விதைகளை மீட்டிருக்கிறேன்.

விதை சேகரிப்புக்காகத் தமிழகத்தின் பல மாவட்டங்களைத் தாண்டி மக்காச்சோள விதைக்காக புனே, சுரை விதைக்காக ஆந்திரா, பீர்க்கு விதைக்காக கர்நாடகா, பூசணி விதைக்காக கேரளா, என பயணம் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

15,000 விவசாயிகளுக்கு (For 15,000 farmers)

ஆறு வருடத்தில் இது வரைக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விதைகளை அனுப்பியுள்ள சரவணகுமார், வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாமல் மாணவர் விடுதிகள் ஆசிரமங்கள் போன்றவற்றிற்கும் காய்கறி கீரை விதைகளை அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் படிக்க...

தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளன- வேளாண்மை இணை இயக்குநர் தகவல்!

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!

English Summary: Need country type seeds? - Available for free here!
Published on: 24 April 2021, 11:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now