Horticulture

Sunday, 22 August 2021 10:31 PM , by: Elavarse Sivakumar

இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் உழவு செய்த நிலங்களில் 65-75 நாட்கள் வயதுடைய பயறு வகைகள் சாகுபடி செய்து விதைப்பண்ணைகளை அமைத்தால் கூடுதல் லாபம் பெறலாம் என வேளாண்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஏற்ற ரகங்கள் (Loading varieties)

பயறு வகைகளில் உளுந்து - வம்பன் 6, வம்பன் 8 மற்றும் எம்.டி.யூ 1 இரகங்கள், பாசிப்பயறு - கோ 8 இரகம், தட்டைப் பயறு கோ (CP) 7 மற்றும் வம்பன் 3 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு உகந்தது.

விதைப்பு (Sowing)

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதுமானது. வரிசைக்கு வரிசை 30 செ.மீட்டரும், செடிக்கு செடி 10 செ.மீட்டரும் இடைவெளி இருக்கும் வகையில் சதுர மீட்டருக்கு 33 செடிகள்வரும் வகையில் விதைப்பு செய்ய வேண்டும்.

உரம் (Compost)

பூக்கும் பருவத்திலும், இளங்காய் பருவத்திலும் 4 கிலோ டிஏபி உரத்தை 20 லிட்டர் தண்ணீரில் முதலில் ஊற வைத்து பின்பு வடிகட்டி தெளிந்தக் கரை சலை எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் செடிகள் முழுவதும் நனையும் வகையில் தெளிக்க வேண்டும்.

உயிரியல் கட்டுப்பாட்டு முறை (Biological control system)

பூச்சி நோய் கட்டுப்பாடுகளுக்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறை சிறந்த தாகும். காய் மற்றும் இலைப்புழுக்களுக்கு மெட்டாரைசியம் சிறந்தது.

நடவு (Planting)

ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி பிறகு நடவு செய்யலாம்.
இவ்வாறு விதை நேர்த்தி செய்வதன் மூலம் பெரும் பாலான பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்த மிகச் சிறந்த முறையாகும். இந்த முறையில் விதைப்பண்ணை அமைத்தால் ஏக்கருக்கு குறைந்த பட்சம் 500 கிலோ மகசூல் பெறலாம்.

தொடர்புக்கு (Contact)

எனவே, பயறு வகைகள் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் உதவி விதை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்

சீ. சக்திகணேஷ்
இராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர்

மேலும் படிக்க...

Business: ரூ.7 லட்சம் மாதம் வருமானம்!!! முதலீடு 3 லட்சம்!

நகைக் கடன் தள்ளுபடி,எவருக்கெல்லாம்? வெளியான முக்கிய தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)