பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 October, 2021 10:22 AM IST

மனிதர்களின் வாழ்வியலோடு எப்போதுமே தாவரங்கள் அதாவது மரங்களின் பங்கு இன்றியமையாதது. பிறந்தபோதுத் தொட்டிலாக, இறந்தபோது பாடையாக எனத் வாழ்வின் தொடக்கம் முதல் முடிவுப்பரியந்தம் வரை நம்மோடு வருவது மரம்.

வேம்பு (Neem)

அத்தகைய மரங்களில் மிகவும் முக்கியமானது என்றால்,அது வேப்பமரம்தான்.
இது நமக்கும் மட்டுமல்ல, விவசாயத்திற்கும் இன்றிமையாததாகவே இதுநாள்வரைக் கருப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக வேளாண்மையில் வேம்பு மற்றும் அதனை சார்ந்த இலை மட்டை மற்றும் வேப்பங் கொட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆல்கலாய்டுகள் (Alkaloids)

  • வேப்ப இலையில் 10 ஆல்கலாய்டும், வேப்ப பட்டையில் 8 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பங் கொட்டையில் 18 வகையான ஆல்கலாய்டுகளும் உள்ளன.

  • இன்றைய கால கட்டத்தில் இயற்கை வேளாண்மையில் முக்கிய பூச்சி நோய் தாக்குதல் கட்டுப்படுத்த கூடியப் பொருளாக வேப்பங்கொட்டைப் பயன்படுகிறது.

  • கடைகளில் விற்கப்படும் வேப்ப எண்ணெய், இரும்புச் செக்கில் அரைக்கப்படுவதினாலும் வெப்பத்தாலும் ஆல்கலாய்டுகள் சிதைந்து விடுகின்றன.

  • இதில் உள்ள மிக முக்கியமான ஆல்கலாய்டு அசாடி ராக்டின்.

வேப்ப இலை (Neem leaf)

இது தானிய சேமிப்பில் அதிக அளவாக பயன்படுத்தப்படுகிறது. தானியங்களை அந்துப் பூச்சிப்போன்றப் பூச்சிகளிடம் இருந்து இயற்கையான முறையில் பாதுகாக்கிறது.

வேப்பம்பட்டை

இவற்றை நன்றாக இடித்து ஊற வைத்து பயிர்களின் மேல் தெளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், இலைச்சுருட்டுப் புழு மற்றும் சாறு ஊறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

வேப்பங்கொட்டை

  • இதனை நன்றாக அரைத்து மக்காச் சோளத்தில்ப், படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிலோ வீதம் பயன்படுத்தலாம்.

  • வேப்பங்கொட்டைக் கரைசலைப் பயிருக்கு தெளிக்கும் போது, வேப்பின் வாசனை, பூச்சிகளை விரட்டும். கசப்பான சுவையால் பூச்சி கள் இலைகளைச் சாப்பிடாது.

  • இதை மீறிப் பூச்சிகள் உண்டால் வயறு மந்தம் ஏற்பட்டு பலவீனமான காணப்பட்டு இறந்து விடுகின்றன.

  • எனவே விவசாயிகள் அனைவரும் அவரவர் சாகுபடிகேற்ப வேப்பம் முத்துக்களைக் கைஇருப்பில் வைத்திருப்பது மிக மிக அவசியம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ரூ.17,000 மானியம் (Rs 17,000 grant)

அதிக அளவிலான நிலங்களைக் கொண்ட விவசாயிகள் வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் மானியத்திட்டத்தில் இணைந்து, வேப்பங்கன்றுகளை நடவு செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு மானியமாக ரூ.17,000 வழங்கப்படுகிறது.

சாகுபடிக்காகச் செய்யும் செலவில் முக்கிய செலவு, பூச்சி மருந்து
தெளித்தல், வேப்ப கொட்டையாக இருந்தால் இந்த வகையான செலவு குறையும். இதனை உணர்ந்து கொண்டதாலேயே தற்போது விவசாயத்தில், வேம்புவின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடன்!

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

English Summary: Neem is essential for natural agriculture!
Published on: 30 October 2021, 10:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now