இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 June, 2021 7:07 AM IST
Credit: 24 Mantra

இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது முற்றிலும் அங்ககப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் விவசாய முறையாகும்.

உயிர்ப்புத் தன்மை (Vitality)

தற்சமயம் நாம் பயன்படுத்தி வரும் உரம், களைக்கொல்லி, பூச்சி, நோய் தடுப்பு மருந்துகளால் மண் தன் வளத்தை இழப்பதோடு அல்லாமல் உயிர்ப்புத் தன்மையும் இழந்து விடுகிறது.

பலத் திட்டங்கள் (Multiple projects)

அதிக அளவு கரிம பொருட்கள் இருந்தால் தான் மண்வளமாகவும் உயிர்ப்புடனும் இருக்கும். இதற்காக மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து அங்கக வேளாண்மை உற்பத்தியினை ஊக்குவிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

குழுவாகப் பதிவு (Register as a group)

இதனால் நில வளத்தை மேம்படுத்தி, விவசாயிகள் விளை பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் கூடுதல் லாபம் பெற வேண்டும் என எண்ணுபவர்க;ள, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள், அங்கக விளை பொருட்கள் பதனிடுவோர் மற்றும், அங்ககப் பொருட்களை விற்பனை செய்வோர்,  தமிழக அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மற்றும் மத்திய அரசின் அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் தனிநபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொண்டு சான்றினை பெறலாம்.

அங்கீகாரச் சான்று (Certificate of Authorization)

அங்கக விளைபொருள் உற்பத்தி, அங்கக விளைபொருள் பதனிடுவோர் மற்றும் அங்க விளைபொருட்கள் விற்பனை செய்வோருக்கு அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

கட்டணம் (Fee)

அங்ககச் சான்றளிப்பிற்கு விண்ணப்பப் படிவம் 3 நகல்கள், உரிய ஆவணங்களுடன் கட்டணம் செலுத்தி விண்ணப் பிக்கலாம். பதிவு கட்டணம், ஆய்வு, சான்று கட்டணம் பயண நேரக் கட்டணம் வருடத்திற்கு சிறு, குறு விவசாயிகள் மொத்தம் ரூ.2700மும்,  பிற விவசாயிகள் ரூ.3200மும், குழு ஒன்றுக்கு பதிவு செய்ய ரூ.7200மும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

தொடர்பு கொள்ள (contact)

அங்ககச்சான்று பண்ணை பதிவு மற்றும் சான்றளிப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சேலம் அங்ககச்சான்று ஆய்வாளர் சு.கவிதா, செல் 99524 13388 என்ற எண்ணிலும், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனரை தி.கௌதமன், செல் 94433 83304 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலைச் சேலம் விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் தி.கௌதமன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி!

பயிர்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைப்பு முறையை விவசாயிகள் கையாள வேண்டும்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு!

நாட்டுக்கோழி வளர்ப்பில் முட்டையின் சத்துக்களுக்கு தேவையான தீவனங்கள்!

English Summary: New projects to promote organic farming!
Published on: 18 June 2021, 08:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now