மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 December, 2020 8:05 AM IST
Credit : Gardening

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இந்த மழையால், வெளியேறும் உர இழப்பை சமன் செய்ய ஏதுவாக, நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் உரங்களை இட வேண்டும் என வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு விளக்கப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:

  • பருவ மழையை (Monsoon) முன்னிட்டு, விவசாயிகள் தங்களின் அறுவடை (Harvesting) பருவத்தில் உள்ள நிலங்களை சுத்தமாக வடிகட்டுதல் வேண்டும்.

  • நிலத்தில் மழையால் (Rain) வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட பயிர்களுக்கு நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்.

  • பண்ணைக் குட்டைகளில் (Pond) மழை நீரை சேமித்துக் கொள்ள வேண்டும்.

  • இதன் மூலம் தாழ்வான நிலப்பகுதிகளில் நுண்ணீர் பாசனம், (Micro Irrigation) மழைத்துவான் அல்லது நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலைச் செடிகளில் வேர் அழுகல் நோய் தென்பட்டால், கார்பன்டாஸிம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் போடவேண்டும்.

  • பயறுவகைப் பயிர்கள், நிலக்கடலைச் செடிகளில் வேர் அழகல் நோய் தென்பட்டால், கார்பன்டாஸிம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற வீதத்தில் இட வேண்டியது அவசியம்.

  • நிலக்கடலை பயிரின் இலை மஞ்சள் நிறமாகத் தென்பட்டால் ஒரு சதவீதம் யூரியா அல்லது 19:19:19 கலப்பு உரக்கரைசலைத் தெளிக்கவும்.

  • கரும்பு பயிரில் கரிப்பூட்டை நோய் மற்றும் புலதண்டு நோய் தாக்குதலைத் தவிர்க்க நடவு விதை கரணைகளை 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட காற்றோட்டமான நீராவில் காண்பித்துவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

மினி பட்ஜெட்டில், மெகா வருமானம் தரும் பெண்களுக்கான தொழில்கள்- முழுவிபரம் உள்ளே!

English Summary: Nitrogen and Potassium should be added to compensate for manure loss due to rains - Department of Agriculture
Published on: 22 December 2020, 08:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now