Horticulture

Monday, 07 October 2019 02:56 PM

பேரிச்சையில் அடங்கியுள்ள எண்ணற்ற சத்துக்களை நாம் அறிந்திருப்போம் ஆனால் இது இந்தியாவில் அவ்வளவு பரவலாக பயிரிடப் படுவதில்லை. அதிக அளவில் அரபு நாடுகளில் தான் பயிரிடப் பட்டு வருகிறது. தற்போது இந்த பேரிச்சையை நம் தமிழ்நாட்டிலும் சிறந்த முறையில் பயிரிட்டு லாபம் ஈட்டலாம்.

பரீராக பேரிட்சை ஒரு தென்னை வகை மரமாகும் மற்றும் நடுத்தர அளவுள்ள தாவரம் இது. இந்த மரமானது 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இந்த மரத்தின் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் வகையையும், அளவையும் பொறுத்து           20 முதல் 70 கலோரி சத்தியினை கொண்டிருக்கும்.  இத்தகைய பேரிச்சையை நம் தமிழ் நாட்டிலும் மிக எளிய முறையில் பயிரிட்டு அதிக லாபம் பெறலாம். 

திசு வளர்ப்பு மூலம் தயாரிக்கப்படும் நாற்றுகளை நாம் துபாயிலிருந்து பெற வேண்டும். மூன்று அங்குலம் வரை இருக்கும் நாற்றுகளை வாங்கி நிகில் பயிர் நடவு செய்ய வேண்டம். அதை மூன்று மாதம் வரை வெளிச்சம் நிறைந்த நிழல் பகுதியில் வைக்க வேண்டும். பின்னர் நாற்றில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளித்து வர வேண்டும். இவ்வாறு பயிரிடுவதால் நாற்றுகள் நன்கு ஒன்றரை அடி வரை வளர்ந்து விடும்.

விலை நிலத்தில் தொடர்ந்து 25 க்கு 25 நீல அகலத்தில் குழிகளை தோண்டி ஆற்று மணல், தொழு உரம், தேவைக்கேற்ப மண் ஆகியவற்றை கொண்டு ஒவ்வொரு குழியையும் நிரப்ப  வேண்டும். பின்னர் அக்குழியின் மத்தியில் முக்கால் அடிக்கு குழி அமைத்து செடிகளை நடவு செய்ய வேண்டும்.

பேரிச்சை நாற்றின் தண்டு பகுதியை ஊசி வண்டுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க நீர் பாய்ச்சிய பின்னர் ஒவ்வொரு முறையும் வசம்பை அரைத்து தூவ வேண்டும். இவ்வாறு நன்கு 2 ஆண்டுகள் பராமரித்தால் செடிகள் சுமார் 5 அடி உயரத்திற்கு வளரும். 

நான்காம் ஆண்டு பருவத்தில் இருந்து வரும் பாலையை விளைச்சலுக்கு விட்டு விடலாம். 25 பெண் மரத்திற்கு ஒரு ஆண் மர செடியை வளர்க்க வேண்டும். பாலை மரத்தில் இருந்து முழுமையாக வெளி வந்த பின்னர் அந்த பாலையில் மேல் மூடியில் இருக்கும் மேல் பகுதியை கிழித்து எடுக்க வேண்டும். பின்னர் ஆண் மரத்தில் இருந்து மகரந்தத்தை எடுத்து பெண் மரத்தின் பூவில் செயற்கை கருவூட்டல் முறையில் வெயிலுக்கு முன்பாக செய்ய வேண்டும்.

பின் பாலை வளர்த்து வளையும் நேரத்தில் அதனை கீழே வளைத்து ஒரு மட்டையில் கட்ட வேண்டும். ஒரு பாலையில் 70 முதல் 80 விழுதுகள் வரும். அதில் பாதி அளவிற்கான விழுதுகளை அகற்றி விட்டு, பாலையின் நுணிப் பகுதியில் கீழிருந்து சுமார் மூன்று அங்குலம் அளவிற்கு வெட்டி விட வேண்டும்

மழை காலங்களில் பழங்களை பாதுகாக்க பாலையை சுற்றிலும் நெகிழி பைகளை கட்டி, பையின் கீழ் பகுதி திறந்திருக்குமாறு கட்ட வேண்டும். பழங்கள் நன்கு பழுக்கும் நேரத்தில் கொசுவலைகளை ஏற்கனவே கட்டப்பட்டுள்ள நெகிழி பைகளின் மேல் கட்டி வவ்வாலிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பாதுகாக்கப்பட்ட செடிகளை 5 மாதங்கள் கழித்து அறுவடை செய்யலாம்.

நன்கு உரம் இட்டு தண்ணீர் பாய்ச்சினால் 6 வது ஆண்டில் இருந்து ஒரு மரத்தில் சராசரியாக 100 முதல் 140 கிலோ வரை நல்ல மகசூல் கிடைக்கும்.      

K.Sakthipriya
Krishi Jagran 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)