பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 May, 2023 4:03 PM IST
Orchid cultivation method and business opportunities in India

இந்தியாவில் ஆர்க்கிட் (Orchid)  சாகுபடி மற்றும் வணிகம் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க புகழ் பெற்றுள்ளது. அதிக முதலீடு மற்றும் பராமரிப்பு தேவைப்படுவதால் சந்தையில் அதற்கேற்ப விலையும் மற்ற பூக்களை விட அதிகமாக இருக்கிறது.

ஆர்க்கிட்கள் (Orchid )அவற்றின் அழகு, நறுமணம் மற்றும் நீண்ட நாட்களாக வாடாது என அறியப்பட்ட கவர்ச்சியான மலர்கள் ஆகும். அவை மலர் தொழில் மற்றும் மிகப்பெரிய உணவு விடுதி, திருவிழாக்கள் போன்றவற்றில் அலங்கார நோக்கங்களுக்காகவும் வாங்கப்படுகிறது.

ஆர்க்கிட் மலர் பொதுவாக மற்ற மலர் செடிகளை போல் மண்ணில் வளராது. அவை மரங்களின் பட்டை மற்ற தாவரங்களின் மேற்பரப்பில் செழித்து வளரும் தன்மை கொண்டது என்பதால், ஆர்க்கிட் மலர் சாகுபடி செய்ய விரும்புபவர்கள் பசுமைக்குடில் (Poly house) அமைப்பது சிறந்தது. பசுமைக்குடில் அமைக்க அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது.

ஆர்க்கிட்கள் (Orchid)  வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலையில் செழித்து வளர்கின்றன. இந்தியாவில் பல்வேறு வகையான ஆர்க்கிட் இனங்கள் உள்ளன. அவற்றில் Dendrobium, Vanda, Cymbidium மற்றும் Phalaenopsis போன்றவை சாகுபடி செய்ய பிரபலமான தேர்வாக உள்ளது.

தமிழகத்தில் சாகுபடி செய்ய ஏற்றது- எது?

மேற்குறிப்பிட்டவற்றில் டென்டரோபோரியம் (Dendrobium) வெப்பமண்டல ஆர்க்கிட் இனங்கள் பொதுவான சென்னை மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் கடலோர பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்ற இனங்களாக உள்ளது.

பசுமைக்குடிலில் 75% பசுமை நிழல் வலை உடன், 70-80% காற்றின் ஈரப்பதம் இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். வெப்பநிலையினை பொறுத்தவரை 18 - 28ºC மட்டுமே இருத்தல் வேண்டும்.

திசு வளர்ப்பு முறையில் இம் மலர் வளர்க்கபடுகிறது. வளர்வதற்கு முன்பே கூறியது போல் மண் தேவைப்படாத நிலையில், பூச்சட்டிகளில் கரி, செங்கல் மற்றும் ஓடுகள், தேங்காய் உமி மற்றும் ஃபைபர் உடைந்த துண்டுகள் மூலம் வளர்க்கப்படுகிறது.

30 நாட்கள் நடவு செய்ததில் இருந்து தொடங்கி ஊட்டச்சத்தாக NPK 20:10:10 @ 0.2% தழை இலைத் பயன்பாடு வாராந்திர இடைவெளியில் உபயோகித்தல் அவசியம். வளர்ச்சி ஊக்கிகளாக 2 மாத இடைவெளியில் ஜிஏ 3 200 பிபிஎம் தெளிக்க வேண்டும். இவை மலர்களின் வளர்ச்சி மற்றும் மலர்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஆர்க்கிட் (Orchid) செடியினை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபூச்சட்டிக்கு மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாற்று பூச்சட்டி மாற்றம் மேற்கொள்ளுவதும் நல்லது. பொதுவாக புதிய வேர்கள் வெளிப்படும் போது மறுபூச்சட்டி செய்வது சிறந்த தருணம் ஆகும்.

பூக்களின் ஆயுட்காலத்தை பிஎ 25 பிபிஎம் கரைசலில் பூகம்புகளை 24 மணி நேரம் நனைப்பதன் மூலம் 13.5 முதல் 24.5 நாட்களாக பூக்கள் வாடாமல் ஆயுளை நீடிக்க முடியும். ஹோல்டிங் கரைசலாக 8 HQC 200 பிபிஎம் + சுக்ரோஸ் 5% திரவம் பூக்களின் ஆயட்காலத்தை 30.5 நாட்கள் வரை அதிகரிக்கிறது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலர் சாகுபடி அறுவடையானது, 75 சதவீதம் மொட்டுகள் திறந்த நிலையிலே மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில் முழுவதுமாக மலர்ந்த மலர்கள் விற்பனையாளர் அடையும் முன் தளர்வுற்றுவிடும்.

கன்னியாகுமரி, கேரளாவில் ஆர்க்கிட் மலர் சாகுபடி பரவலாக காணப்படுகிறது. பராமரிப்பு முறை அதிக செலவினத்தை ஏற்படுத்துவதால் இது அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் ஏற்றதாக இல்லை. இருப்பினும் சந்தையில் இப்பூக்களுக்கு நல்ல மவுசு இருப்பதால் தற்போது இந்த பூவினை சாகுபடி செய்ய விவசாயிகள் மத்தியில் ஆர்வம் மேலோங்கி வருகிறது.

மேலும் காண்க:

PM kisan 14 வது தவணை வழங்கும் உத்தேச தேதி அறிவிப்பு!

English Summary: Orchid cultivation method and business opportunities in India
Published on: 30 May 2023, 04:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now