மண்ணிற்கும், மனிதர்களுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் விவசாயம் என்றால் அது அங்கக வேளாண்மை எனப்படும் இயற்கை வேளாண்மைதான்.
பாரம்பரிய விவசாயம் (Traditional agriculture)
உண்மையில் இதுதான் நம்முடைய பாரம்பரிய மற்றும் பழங்கால வேளாண்மை. குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதே ரசாயன வேளாண்மை. இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி உணவில் நஞ்சைக் கலக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டதுதான் வேதனை தரும் விஷயம்.
இந்த நிலையை மாற்றி, மண்ணையும், மனிதகுலத்தையும் காப்பாற்ற நிச்சயம் தேவை அங்கக வேளாண்மை. அந்த வகையில் அங்கக வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து வேலூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் முனைவர் ப.தேன்மொழி சில விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
அமிர்தபாண (நீர் அமிர்தம்)
தண்ணீரைப் பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இக்கரைசல் ஓர் சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டி கரைசலாகவும் பயன்படுகிறது.
தேவைப்படும் பொருட்கள் (Ingredients required)
-
தண்ணீர்
-
நாட்டுப்பசுக் கோமியம்
-
சாணம்
-
வெல்லம்
-
கடலைமாவு
-
எருக்கு இலை
தயாரிக்கும் முறை (Preparation)
-
இதைத் தயாரிப்பதற்கு ஓர் கலனின் தண்ணீர் 10 லிட்டர், நாட்டுப்பசுவின் கோமியம் 1 லிட்டர், சாணம் 1 கிலோ, கடலை மாவு 1 கிலோ, வெல்லம் 100 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
-
பின்பு நன்கு தூளாக்கப்பட்ட வேம்பு மற்றும் எருக்கு இலை தலை 1 கிலோ சேர்த்து நன்குக் கலக்கிவிட வேண்டும்.
-
பின்னர் கலனின் மேற்புரத்தைக் காற்று உட்புகாதவாறு மூடி 11 முதல் 15 நாட்கள் வைத்திருக்க வேண்டும்.
-
15 நாட்கள் கழித்து இதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
வடிகட்டி எடுத்துக்கொண்ட வடிநீர்க் கலவையை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் கலந்து, பூச்சி விரட்டியாகவும் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுத்தலாம்.
-
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் இந்த வடிநீர்க்கலவையைச் சேர்த்துக் (6% ) களைக்கொல்லியாகவும் பயன்படுத்தலாம்.
எனவே இயற்கை - வேளாண்மையில் ஆர்வம் உள்ள விவசாயிகள் அனைவரும் மேற்குறித்த தொழிற்நுட்பத்தினை கடைபிடித்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!