பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 August, 2019 5:27 PM IST

விவசாயம் என்பது நம் இந்தியாவின் முதுகெலும்பு ஆகும்.  இந்திய பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு அளப்பரியது. தற்போது வேளாண்துறையில் பல வியத்தகு மாற்றங்கள் நிகழ்த்து வருகின்றன. பெரும்பாலான விவசாகிகள் செயற்கை உரம், பூச்சி கொல்லி இவற்றை தவிர்த்து இயற்கை உரம், இயறக்கை விவசாயம் என பழமையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இது ஆரோக்கியமான விவசாயத்திற்கும், ஆரோக்கியமான சமூகத்திற்கும் வழிவகுக்கும்.     

மத்திய அரசும் வேளாண்துறைக்கும், விவசாகிகளும் பல்வேறு திட்டங்களையும், மானியங்களையும் அறிவித்து விவசாயத்தையும், விவசாகிகளையும்  ஊக்குவித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்குள் விவாசகிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு இலக்கு நிர்ணயத்துள்ளது.

வேளாண்மை என்பது ஒரு கலை

முறையாக கையாள தெரிந்தவர்களுக்கு மட்டுமே லாபம் ஈட்டும் தொழில் எனலாம். அளவான தண்ணீர், சூரிய வெளிச்சம், போதுமான ஊட்டச் சத்துக்கள் இவை பயிரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகும். இயற்கை ஊட்டச்சத்துக்களையும்,உரங்களையும் பயன்படுத்தி வேளாண்மை செய்யும் போது செடிகள் மட்டுமல்லாது அவற்றை உண்ணும் அனைத்து ஜீவராசிகளும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இயற்கை விவசாயம்

இன்று பெரும்பாலானோர் இயற்கை வேளாண்மை,  இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருட்களை அதிகம் விரும்பி பயன்படுத்துகின்றனர். 'இயற்கை வேளாண்மை' என்ற வார்த்தை அதிக பேரால் உச்சரிக்க படுகிறது. ஆனால் அதை பற்றி முழுமையான தகவல் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது. இயற்கை வேளாண்மை என்பது பல்லாயிரம் வருடங்கள் முன்பிருந்தே பழக்கத்தில் இருந்தது. செயற்கை உரங்கள் மற்றும் உயிர்கொல்லிகள் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு வந்தவை.

இயற்கை விவசாயம் பற்றிய பார்வை

பழமையை நோக்கிய பயணம்

இயற்கை விவசாயம், இயற்கை உணவு என்பது ட்ரெண்டிங்/ புழக்கத்தில் உள்ள வார்த்தை அல்ல. இது ஒரு பழமையை நோக்கிய பயணம். ஆடம்பரம் அல்ல, ஆரோக்கியமானது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதால் சுற்று சூழல் பாதுகாக்க படுகிறது. பல்லுயிர் பெருகி ரசாயனத்தின் தேவை இல்லத்தில் சூழல் உருவாகும். சிட்டு குருவிகளையும், அணில்களையும் அடுத்த தலைமுறை பார்க்க வேண்டாமா?

இந்தியாவில் இயற்கை வேளாண்மையின் வளர்ச்சி

  • இயற்கை வேளாண்மையை பொறுத்த வரை உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடி என்றே கூறலாம். இன்று வேளாண் கல்லூரிகளில் கூட இயற்கை வேளாண்மை குறித்த பட்ட படிப்புகளும், தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • தற்போது இயற்கை வேளாண்மைக்கு உதவும் புதிய உபகரணங்கள், நீர்ப்பாசன முறைகள், வேளாண் பொருட்களை முறையாக உற்பத்தி செய்யவும், சந்தை படுத்துவதற்கும் தணிக்கை குழுக்கள், சான்றிதழ்கள் என அரசு தரப்பில் செய்யப்பட்டு வருகிறது.
  • கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இயற்கை வேளாண்மை நல்ல வளர்ச்சியும், மக்களிடம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
  • உலகளவில் இயற்கை வேளாண்மையில் இந்தியா 33 - வது இடத்தில உள்ளது.
  • இயற்கை வேளாண்மை செய்யும் நிலப்பரப்பின் அடிப்படையில் உலக அரங்கில் 88- வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் மத்திய பிரதேசம் மாநிலம் (52%) இயற்கை வேளாண்மையில் முதலிடத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் (6%) இரண்டாம் இடத்திலும், ஒடிசா (9.7%) மூன்றாம் இடத்திலும்  உள்ளது.
  • உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் மாநிலம் முழுவதும் இயற்கை வேளாண்மை மட்டுமே நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை வேளாண்மை முறைகள்

  • பயிர் சுழற்சி
  • இயற்கை உரம்
  • முடக்கு போடுதல்
  • இயற்கை பூச்சி கொல்லி
  • மண்புழு உரம்

 இவை யாவும் இயற்கை வேளாண்மையின் ஒரு அங்கமாக உள்ளன.

இயற்கை வேளாண்மையின் நோக்கம்

  • அனைவருக்கும் நஞ்சற்ற உணவை தருதல்
  • இயற்கையை முறையாகவும், முழுமையாகவும், பயன் படுத்துதல்
  • எல்லா வகையான மாசுகளையும் கட்டுப்படுத்தி இயற்கையோடு இணைத்து பயணிப்பது
  • செலவை கட்டுப்படுத்துதல்
  • மண்ணின் வளத்தை பாதுகாத்தல்

நன்மைகள்

  • மண்ணின் நலமும், வளமும் பாதுகாக்கப் படும்.
  • நச்சு தன்மை முற்றிலும் அளிக்கப்படும்.
  • புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும்
  • இயற்கை வேளாண்மை பாதுகாக்கப் படும்.
  • வேளாண் கழிவுகள் மறு சுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்த முடியம்.

எதிர் கொள்ளும் பிரச்சனைகள்

  • இயற்கை வேளாண்மை பற்றிய முழுமையான புரிதல் இல்லை.
  • சாகுபடி குறைவு
  • வேளாண்மைக்கு தேவைப்படும் கால அளவு அதிகமாக உள்ளது.
  • அதிக அளவிலான விவசாகிகள் தேவைப்படுகிறார்கள்.

நாம் அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கருத்தில் கொண்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம் என்று உறுதி எடுப்போம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Organic Farming: The Recent Trends In India and Its Growth
Published on: 17 August 2019, 05:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now